Images
  • sit work
    (படம்: Pixabay/rawpixel)

மணிக்கணக்காக வேலையிடத்தில் உட்காருவதைக் குறைக்க உதவும் மேசை

நீண்ட நேரம் வேலையிடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்ததால் உடல் வலி ஏற்பட்டதுண்டா?

அதனால் வேலையில் நீங்கள் செலுத்தும் கவனமும் பாதிக்கப்படலாம்.

நாற்காலியில் அமரும் நேரத்தைக் குறைத்து வேலையிடச் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையிலான ஒரு முறையை பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

'Sit-stand desks' என்று அது அழைக்கப்படுகிறது.

நாற்காலியில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் வேலை செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை, 'Sit-stand' நாற்காலி மேசைகள்.

அதன் வழி ஊழியர்கள் அமரும் நேரம் குறைந்து, ஆரோக்கியமும் அதிகரித்ததாக ஆய்வில் தெரியவந்தது.

140க்கும் அதிகமானோர் அவ்வகை மேசையை ஓராண்டுக்குப் பயன்படுத்தினர்.

அதிக நேரம் உட்காருவதற்குப் பதிலாக நிற்பதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகள் கிட்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

நாள் முழுவதும் வேலையிட மேசையில் அமர்வதை இதய நோய் போன்ற நோய்களுடன் ஆய்வாளர்கள் தொடர்புபடுத்தியுள்ளனர். 


ஆய்வில், SMArT Work எனப்படும் வேலை இட வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 77 பேர் அதனைப் பயன்படுத்தினர்.

அவர்களின் உயரத்துக்கு ஏற்ப மேசையின் உயரத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

பயிற்சிகள், சுய மதிப்பீடு செய்யும் கருவி, இலக்கை வகுப்பதற்கான கையேடு போன்றவை வழங்கப்பட்டன.

ஒப்புநோக்க 69 பேர் வழக்கமான வேலையிடங்களில் பணிபுரிந்தனர்.

SMArT Work வேலைப் பகுதியில் உள்ள ஊழியர்களின் தொடைகளில் கருவி ஒன்று கட்டப்பட்டது.

அதன்வழி அவர்கள் உட்காரும், நிற்கும் நேரம் கணக்கிடப்பட்டது.

மூன்று மாதத்துக்கு ஒரு முறை அந்தத் தகவல்கள் திரட்டப்பட்டன.

புதிய அம்சங்களோடு வேலை செய்த ஊழியர்களின் பணியில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன.

வாழ்க்கைத் தரமும் உடல் நிலையும் மேம்பட்டிருப்பதை ஆய்வு காட்டியது.  

Top