Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் உறங்குவது உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும். எப்படி?

விமானத்தில் ஏறியவுடன் உறங்கலாம் என்று நினைப்பீர்கள்... ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் காதுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும். 

வாசிப்புநேரம் -
விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் உறங்குவது உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும். எப்படி?

(படம்: Pixabay)

5 நாள் பயணம்.

முன்கூட்டியே பயணத்திற்குத் தேவையான பொருட்களைப் பையில் வைக்கவில்லை.

இரவு முழுவதும் பயணத்திற்கான கடைசி நிமிட ஏற்பாடுகள்.

காலை 7 மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைய வேண்டும்.

விமானத்தில் ஏறியவுடன் உறங்கலாம் என்று நினைப்பீர்கள்... ஆனால் அவ்வாறு செய்வது உங்கள் காதுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.

MedlinePlus எனும் இணையத் தகவல் சேவை இவ்வாறு கூறியுள்ளது.

விமானம் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் விமானத்திலுள்ள காற்றழுத்த மாற்றத்தால் காதுகள் அடைப்பது போல் நாம் உணர்கிறோம்.

விழித்து இருக்கும்போது நாம் இயல்பாகவே காதுகளில் ஏற்படும் இந்த அழுத்தத்தைப் போக்க முற்படுகிறோம்.

தசைகளில் ஏற்படும் அந்த அழுத்தத்தைக் கவனிக்காமல் உறங்கும்போது மயக்கம், காதுகளில் தொற்று, செவிப்பறை பாதிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வழிவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்