Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தூக்கம், அதிகமானாலும் குறைவானாலும் இதயத்துக்கு நல்லதல்ல

போதிய அளவு தூக்கம் இல்லாமல் போவதால் இதயம் மட்டுமின்றி உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று ஆய்வை வழிநடத்திய ஆய்வாளர் குவான்ஹெ யாங் கூறினார்.

வாசிப்புநேரம் -
தூக்கம், அதிகமானாலும் குறைவானாலும் இதயத்துக்கு நல்லதல்ல

(படம்:Pixabay)

சில வேளைகளில் அதிக நேரம் தூங்கினால்கூட எழுந்தவுடன் சோர்வாகவே இருக்கும்.

குறைவான தூக்கத்துக்குப் பிறகு சொல்லவா வேண்டும்?

இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்களில் முக்கியமான ஒன்று, தூக்கம்.

(படம்:  AFP)

போதிய தூக்கம் இல்லாதோருக்கு அல்லது அதிகமாகத் தூங்குவோருக்கு மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படும் அபாயம் அதிகம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஓர் இரவுக்குச் சுமார் 7 மணி நேரம் தூங்கியோருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் மிகக் குறைவாய் இருந்ததாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

(படம்: ராய்ட்டர்ஸ்)

இரவில் சுமார் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குவோரின் இதயம் அவர்களின் வயதைவிட சுமார் 5 வயது மூப்படைந்ததுபோலச் செயல்படுவதாய் ஆய்வாளர்கள் கூறினர்.

போதிய அளவு தூக்கம் இல்லாமல் போவதால் இதயம் மட்டுமின்றி உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று ஆய்வை வழிநடத்திய ஆய்வாளர் குவான்ஹெ யாங் கூறினார்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல்பருமன் போன்றவற்றுக்கும் தூங்கும் நேரத்துக்கும் தொடர்புகள் இருப்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்