Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சின்னச் சின்னச் செயல்களைச் செய்து முடிப்பதில் மனநிறைவு காணும் பழக்கத்தின் பலன்கள்

நீங்கள் எப்போது கடைசியாக மிக மகிழ்ச்சியாக உணர்ந்தீர்கள் ? ஒரு மிகப் பெரிய செயலைச் செய்து முடித்தபோது ?

வாசிப்புநேரம் -
சின்னச் சின்னச் செயல்களைச் செய்து முடிப்பதில் மனநிறைவு காணும் பழக்கத்தின் பலன்கள்

(படம்: Pixabay)

நீங்கள் எப்போது கடைசியாக மிக மகிழ்ச்சியாக உணர்ந்தீர்கள் ?

ஒரு மிகப் பெரிய செயலைச் செய்து முடித்தபோது ?

நெடுநாள் காத்திருந்த பதவி உயர்வை அடைந்தபோது ?

நெடுநாள் செய்ய நினைத்ததைச் செய்துமுடித்தபோது ?

கடன்பற்று அட்டையிலிருந்த கடன்தொகையைக் கட்டிமுடித்தபோது ?

வீட்டு அடைமானக் கடனைக் கட்டிமுடித்தபோது ?

இருக்கலாம். அதில் தவறே இல்லை. அது இயல்புதான்.

அதேவேளையில், சின்னச் சின்ன செயல்களைச் செய்து முடிக்கும்போதும் நாம் நம்மைப் பாராட்டி மகிழ்ந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்னும் செய்து முடிக்காமல் எஞ்சியுள்ள செயல்களை எண்ணி எண்ணி நம்மை நாமே நொந்துகொள்வதில் பலனில்லை.

சிறுகச் சிறுகவாவது அதைச் செய்து முடிப்பதுதான் முக்கியம்.

எது எதைச் சரிவரச் செய்தோம் என்பதில் நிறைவு காணும்போது, வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்கிறது.

இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் நம்மிடையே, ஊக்கமின்மை, சோர்வு ஏற்படுவது இயல்பானது.

அதைத் தவிர்க்க, சிறு வெற்றிகள்மீது கவனம் செலுத்துவது முக்கியமானது என்கிறார் ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளிப் பேராசிரியர் தெரேசா அமபைல் (Teresa Amabile).

New York Times செய்தி நிறுவனத்திடம் அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்

சிறு வெற்றிகள் என்றால் என்ன...?

சிறு வெற்றிகள் எனப்படுபவை, சந்தைக்குச் சென்று சரியான அளவில் தேவையானவற்றை வாங்குதல், வீட்டைச் சுத்தம் செய்தல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல், நேரத்தோடு சத்தான உணவை உட்கொள்ளுதல்- போன்றவையாகும்.

நாம் செய்யவேண்டிய அத்தியாவசியச் செயல்களைச் செய்து முடிப்பதைக் கூடச் சிறிய வெற்றியாகக் கருதலாம்.

மன நிம்மதியை எவ்வாறு அடையலாம்...?

ஒரு நாளில் ஒருவர் எந்த அளவுக்குத் தமது செயல்களைச் சரிவரச் செய்துள்ளாரோ அந்த அளவுக்கு அவர் மனநிம்மதி பெறுவார்.

பெரிய வெற்றிகள், சிறிய வெற்றிகள்...

பெரிய வெற்றிகளை நினைத்து பெரும்பாலானோர் மகிழ்ச்சியடைவது வழக்கம். ஆனால் பெரிய வெற்றிகளை அடைவது கடினம் - அதற்கு ஆண்டுக்கணக்கில் கூட ஆகலாம்.

அதற்கு பதிலாகச் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது, ஒருவரிடத்தில் நிம்மதியையும் மனநிறைவையும் ஏற்படுத்தும்.

பத்து பாகங்கள் கொண்ட மிகப் பெரிய இலக்கியப் புத்தகத்தைப் படித்து முடிப்பது பெரிய வெற்றி.

அந்தப் புத்தகத்தின் அத்தியாயம் ஒன்றை அன்றாடம் வாசிப்பது சிறிய வெற்றி...  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்