Images
  • huawei
    (படம்: REUTERS/Hannibal Hanschke)

ஆப்பிள், சாம்சுங் திறன்பேசிகளை ஓரங்கட்டும் சீனத் திறன்பேசிகள்

இந்தியா, இந்தோனேசியா, மியன்மார் போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் திறன்பேசிகளைக் கொண்டு செல்கின்றன சீன நிறுவனங்கள்.

இதனால், ஆப்பிள் சாம்சுங் நிறுவனங்கள் திறன்பேசிச் சந்தையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சவாலைச் சந்தித்துவருகின்றன.

சீனத் திறன்பேசிகளின் குறைவான விலை, புத்தாக்கமிக்க அம்சங்களுக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை.

500 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டிருந்தன ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்கள். ஆனால் இப்போது, ஆப்பிளின் இரண்டாம் இடத்தில் சீனாவின் ஹூவாவேய்.

சாம்சுங்கின் முதலிடத்தை ஹூவாவேய் பிடிக்கும் நாள் தூரத்தில் இல்லை என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
 

Top