Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

பாம்புகள் என்றால் பலருக்கும் பயம். அவற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.  ஆனால் பாம்புகளைப் பற்றிய பின்வரும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -
பாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

(படம்: Pixabay)


(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

பாம்புகள் என்றால் பலருக்கும் பயம்.

அவற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

பாம்புகள் நிலத்தில் ஊர்ந்து செல்லும், அவற்றுக்குக் காதுகள் கிடையாது போன்ற பலவற்றை நாம் ஏற்கனவே அறிவோம்.

ஆனால் பாம்புகளைப் பற்றிய பின்வரும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

(படம்: Pixabay)

1. பாம்புகள் ஈராண்டு வரை உணவில்லாமல் தாக்குப்பிடிக்கும்.

பாம்புகளின் உடலில் செரிமானம் மிக மெதுவாகவே இருக்கும். அதனால் அவற்றால், நீண்ட நாட்கள் உணவில்லாமல் தாக்குப் பிடிக்க முடியும்.

2. தலையைவிட பெரிய அளவு வாயைத் திறக்கும் பாம்புகள்

(படம்: Pixabay)

பாம்புகளால் மெல்ல முடியாது. அதனால் பெரிய மிருகங்களை விழுங்கும் வகையில் அவற்றின் தாடை எலும்பு தானாகவே விரிவடைந்து கொள்ளும்.

3. பாம்புகளால் வாசம் நுகர முடியாது

(படம்: Pixabay)

பாம்புகள் நாக்கின் வழியே வாசனையை உள்வாங்குகின்றன. வெவ்வேறு வாடைகளைக் கண்டறியும் தன்மை பாம்புகளின் வாயிலுள்ளது.

4. பாம்புகளின் செதில்கள், மனிதர்களின் நகங்களைப் போன்றவை

மனிதர்களின் நகங்கள் Keratin எனும் புரதத்தால் ஆனவை. பாம்புகளின் செதில்களும் அதே புரதத்தால் ஆனவை.

5. பாம்புகளின் இருதயம் அவற்றின் உடலில் அங்குமிங்கும் நகரும்

பாம்புகளின் உடலில் 'diaphragm' எனும் வயிற்றுப் பரப்பு (உதரவிதானம்)இல்லை. அதனால் அவற்றின் இதயம் அங்குமிங்கும் நகரும். பெரிய அளவிலான விலங்குகளை அது விழுங்கும்போது இதயம் பாதிப்படையாமலிருக்க அது உதவும்.

பாம்புகளைப் பராமரிக்கும் பாம்பாட்டிகள் பற்றி இன்றைய 8.30மணிச் செய்தியில்...  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்