Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாளுக்கு 10,000 அடிகள்... அதன் நன்மைகள்?

ஒருவர் சுகாதாரத்துடன் இருப்பதற்கு உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.

வாசிப்புநேரம் -
நாளுக்கு 10,000 அடிகள்... அதன் நன்மைகள்?

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

ஒருவர் சுகாதாரத்துடன் இருப்பதற்கு உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.

உணவைச் சரியான அளவில் உண்பது மட்டும் போதாது. உடற்பயிற்சி செய்வதும் முக்கியம் என உடல் ஆரோக்கிய நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.

ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை எனப் பலரும் புலம்புகின்றனர்... அதற்கான மிகச் சுலபமான வழி, அன்றாடம் பொதுவான நடவடிக்கைகளில் உடற்பயிற்சியைச் சேர்த்துக்கொள்வதே! அதில் ஆக எளிமையானது, நடைப்பயிற்சி.

(படம்: Pixabay)

(படம்: Pexels/Daniel Reche)

வேலையில் இருக்கும்போதோ, வீட்டில் இருக்கும்போதோ, இங்கும் அங்கும் நடப்பது வழக்கம்.

நாம் எத்தனை அடி எடுத்து நடக்கிறோம் என்பதைக் கணிக்கத் திறன்பேசிச் செயலிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்றைப் பதிவிறக்கம் செய்யலாம்...

நாளுக்குக் குறைந்தது 10,000 அடிகளை எடுத்துவைப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் விளையும்:

(படம்: Pixabay)

Pixabay

இதயம் வலிமை பெறும்

  • நடப்பது இதயத்திற்குச் செல்லும் உயிர்வாயுவை அதிகரிக்கும், தசை வளர்ச்சியைக் கூட்டும்
  • நுரையீரல் வலுவாகும்
  • நடக்கும்போது மூச்சுவிடுவது அதிகரிக்கும். அதன் மூலம் அதிக உயிர்வாயு உடலுக்குள் நுழையும்போது, நுரையீரலையும் அதைச் சுற்றியுள்ள தசைகளையும் வலுப்படுத்தும்

கவனச் சக்தி அதிகரிக்கும்

படம்: PIXABAY

  • பொதுவாக உடற்பயிற்சிகளால் உடலில் உள்ள மகிழ்ச்சியளிக்கும் Endorphon போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகமாகும். அதனால் ஒருவரிடத்தில் உள்ள சோர்வு, பதற்றம் போன்றவை குறையும், கவனச் சக்தியும் அதிகரிக்கும்.

எலும்புகள் உறுதியாகும்

(படம்: Pixabay)

Pixabay

  • எலும்புகளைப் பாதிக்கக்கூடிய பாரந்தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளைப் போலல்லாமல், நடப்பதன் மூலம் எலும்புகள் வலிமையடைகின்றன. அதனால் Osteoporosis போன்ற எலும்பு நோய்களைத் தவிர்க்கலாம்.

நிம்மதி அளிக்கும்

  • நடக்கும்போது Neurotransmitters என்றழைக்கப்படும் seratonin, dopamine போன்ற நரம்பியக்க அணுக்கள் வெளியாகின்றன. அவை ஒருவரது மனநிலையைச் சீர்ப்படுத்தும் தன்மையைப் பெற்றிருப்பதால் நடக்கும்போது பலரும் நிம்மதி அடைவதை உணரலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்