Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மேலிருந்து பார்த்தால் இப்படித்தான் இருக்குமா?

வீட்டில் வாரயிறுதியில் என்ன செய்வதென்று தெரியவில்லையா?

வாசிப்புநேரம் -

வீட்டில் வாரயிறுதியில் என்ன செய்வதென்று தெரியவில்லையா?

சொகுசாகச் சாய்ந்துகொண்டு இவற்றைப் பார்த்து 'அட! அருமை' என்று சொல்லலாம், வாருங்கள்!

Google Earth

நேரில் பார்க்கையில் சாதாரணமாகத் தோன்றும் பல இடங்கள், Google Earth வழி, மேலிருந்து பார்க்கையில் புதுத் தோற்றமளிக்கும்.

உலகின் விந்தையான சில இடங்களை அப்படிப் பார்க்கத் தயாரா?

earth.google.com இணையப்பக்கத்துக்குச் செல்லுங்கள். அதிலுள்ள தேடல் பக்கத்தில், கொடுக்கப்பட்டுள்ள திசைகாட்டிக் குறிப்பை இடுங்கள்...படத்தைக் கண்டுரசியுங்கள்!

1. கித்தார் காடு (Guitar Forest)

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

அர்ஜெண்டினாவில் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் காடு. 7,000 மரங்களைக் கொண்ட ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட காட்டை 1979ஆம் ஆண்டு, உருவாக்கி வைத்திருக்கிறார் ஒருவர்.

(33°52'04.4"S 63°59'13.2"W)

2. சிங்க ராஜா (Lion King)

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

'ஹகூனா மடாடா' Lion King திரைப்படம் நினைவுக்கு வருகிறதா? இங்கிலாந்தின் குன்றுப் பகுதியில் உள்ளது இந்த உருவம்.

1933ஆம் ஆண்டு 800 டன் வெள்ளைச் சுண்ணாம்புக் கட்டியைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

(51°50'55.1"N 0°33'16.6"W)

3. பாட்மேன் (Batman)

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

இந்த பாட்மேன் சின்னம், ஆக்கினாவாவில் உள்ள ஒரு கட்டடம். இதில் அமெரிக்க ஆகாயப் படையின் ராணுவப் பிரிவு அமைந்துள்ளது. 1980கள் முதல் அங்குள்ள இந்தக் கட்டடத்தை யார் வடிவமைத்தது என்று தெரியவில்லை.

(26°21'28.4"N 127°47'01.7"E)

4. இதய வடிவில் ஒரு தீவு

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

குரோஷியாவில் உள்ளது இந்தத் தீவு. கேலெச்ஜாக் (Galesnjak) எனும் இந்தத் தீவு இயற்கை மனிதனுக்கு அளித்த அன்புப் பரிசு.

(43°58′41.24″N 15°23′1.14″E)

5.ரத்த ஏரி

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ளது இந்த ஏரி. இது ரத்தச் சிவப்பில் இருப்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. கட்டுக்கதைகள் மட்டுமே உள்ளன.
2007-ஆம் ஆண்டு இப்படி ஓர் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

(33.396157° N, 44.486926° E)

6. படகுக் கட்டடம்

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

இது நமது மெரினா பே சாண்ட்ஸ் அல்ல. ஹாங்காங்கில் உள்ள வாம்போ கடைத்தொகுதி. மேலிருந்து பார்த்தால் இப்படித் தெரிகிறது.

(22°18'14.15"N, 114°11'24.66"E)

7. கோகோ கோலா சின்னம்

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

சிலியின் பாலைவனத்தில் உள்ளது இந்தக் கோகோ கோலா சின்னம்.

கோக் நிறுவனம் அதன் 100ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, சிலியின் பாலைவனத்தில் தனது சின்னத்தை நிறுவியது.

70,000 போத்தல்களைக் கொண்டு 120அடி உயரத்தில் 400 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டது சின்னம். 1986ஆம் ஆண்டு அது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

(18°31'45.1"S 70°15'00.0"W)

8. Space Invaders - சிங்கப்பூரில்

(படம்: Google Earth)

(படம்: Google Earth)

Space Invaders விளையாட்டு தெரியுமல்லவா? அதைப் போலவே காட்சியளிக்கும் இந்தப் படத்தில் இருப்பது, நம் உட்லண்ட்ஸில் உள்ள கழக வீடுகள் தான்.

(1.4418° N, 103.8074° E)

உங்கள் கற்பனையில் இன்னும் ஆயிரம் உதிக்கலாம், கண்டுபிடித்து மகிழுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்