Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியில் பயன்படுத்தக்கூடிய சில புதிய அம்சங்கள்...உங்களுக்குத் தெரியுமா?

நமது அன்றாடச் செயல்களை வெகு சுலபமாக்கி வருகிறது நமது கைத்தொலைபேசி.  

வாசிப்புநேரம் -

நமது அன்றாடச் செயல்களை வெகு சுலபமாக்கி வருகிறது நமது கைத்தொலைபேசி.

பேச, பாடல் கேட்க, படம் பார்க்க, மின்னஞ்சல் படிக்க என எல்லாவிதமான வேலைகளையும்
கைத்தொலைபேசி மூலமாகவே, இருந்த இடத்திலிருந்து முடிக்க நம்மால் முடிகிறது.

நாளுக்கு நாள், அதில் புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றைப்பற்றி அறிமுகம் செய்துகொள்வது, சிலருக்கு அதிகப் பயனுள்ளதாக அமையலாம்.

Android கைத்தொலைபேசிகளில் உள்ள அம்சங்கள் சில...


1)சொந்தமாக உருவாக்கப்படும் Emoji

Gboardஇல் உள்ள Emoji Kitchen வழியாக சொந்தமாகவே Emojiகளை உருவாக்கலாம். சுமார் 140,000 வகை Emojiகளை அதில் தயாரிக்கலாம்.


2) அதிகமான ஒலிப் புத்தகங்கள்

விடுமுறைக் காலத்தில் புத்தகங்களின் ஒலிப்பதிவைக் கேட்டு, நேரத்தைக் கழிக்க விரும்புவோர் Play Store வழியாகக் கூடுதலான ஒலிப் புத்தகங்களைப் பெறலாம். தானியக்க ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் சொந்தமாகக் குரல் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன.


3)குரலை வைத்துக் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துதல்

Voice Access அம்சம் வழியாக, வழக்கமாகப் பயன்படுத்தும் சில அம்சங்களைக் குரல் வழியாக இயக்கலாம். உடற்குறையுள்ளோரைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அம்சம் இது.


4)ஒரே நோடியில் கண்டுபிடிக்கலாம் இடங்களை

Google Mapsஇல் உள்ள புதிய Go Tab மூலம், ஒரு முறைத் திரையைத் தட்டினாலே, அடிக்கடி செல்லும் இடங்களுக்கு வழி தெரிந்துகொள்ளலாம்.


5) விருப்பமான செயலிகளைப் பகிர்ந்துகொள்ளலாம்

Nearby Share அம்சத்தின் மூலம் இணையவசதி இல்லாதவர்களுடனும் செயலிகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்