Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீச்சல், மெதுவோட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் சிந்திக்கும் திறனை மேம்படுத்தக்கூடும் - ஆய்வு

நீச்சல், மெதுவோட்டம் உள்ளிட்ட ஏரோபிக் வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் மூத்தோரிடையே சிந்திக்கும் திறன் மேம்படுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாசிப்புநேரம் -
நீச்சல், மெதுவோட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் சிந்திக்கும் திறனை மேம்படுத்தக்கூடும் - ஆய்வு

படம்: Pixabay

நீச்சல், மெதுவோட்டம் உள்ளிட்ட ஏரோபிக் வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் மூத்தோரிடையே சிந்திக்கும் திறன் மேம்படுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடுமையான உடற்பயிற்சியின் மூலம் இளையர்களிடத்திலும் அதே பலன் கிடைப்பதாக அண்மை ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Neurology சஞ்சிகையில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

20 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

அவர்கள் 6 மாத காலத்திற்கு உடற்பயிற்சி செய்தனர்.

அதில் அவர்களின் சிந்திக்கும் திறன், தர்க்க அறிவு, முடிவெடுக்கும் திறன் ஆகியவை மேம்பட்டதாகத் தெரிய வந்ததுள்ளது.

அதே காலகட்டத்தில் இலேசான உடற்பயிற்சியைச் செய்த பிரிவினருக்கு அதேபோன்ற பலன்கள் கிடைக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்