Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதீத அனல் - அடிப்படைத் தேவையாகுமா குளிர்சாதனம்?

பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் அடிக்கடி அதீத அனல்காற்று வீசும்வேளையில், குளிர்சாதனங்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது.

வாசிப்புநேரம் -
அதீத அனல் - அடிப்படைத் தேவையாகுமா குளிர்சாதனம்?

படம்: Unsplash/Annie Spratt

பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் அடிக்கடி அதீத அனல்காற்று வீசும்வேளையில், குளிர்சாதனங்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது.

சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 புதிய குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனையாகின்றனவாம்.

ஆனால் அவற்றைக் காசு கொடுத்து வாங்க இயலாத வசதி குறைந்தவர்கள் வெப்பம் தாங்காமல் மயங்கிவிழும் அபாயம் அதிகம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.

2050ஆம் ஆண்டுக்குள் குளிரூட்டுவதற்கான எரிசக்திப் பயன்பாடு மும்மடங்கு ஆகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வெப்ப நாடுகளான இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் போன்றவற்றில் அது ஐந்து மடங்கு ஆகக்கூடும்.

அதிகரிக்கும் வெப்பநிலை சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உற்பத்தித் திறனையும் பாதிப்பதாகக் கூறுகின்றனர் பருவநிலை ஆய்வாளர்கள்.

ஐக்கிய நாட்டு நிறுவன ஆதரவுபெற்ற நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர், குளிரூட்டும் வசதி இல்லாததால் சிக்கல்களை எதிர்நோக்குவதாய்த் தெரிவித்திருந்தது.

பூமியின் வெப்பம் உயர்ந்துகொண்டே போகும் சூழலில், குளிரூட்டுதல் என்பது சொகுசு அம்சம் அல்ல; அன்றாட வாழ்வுக்கான அடிப்படைத் தேவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் சாதாரண மின்விசிறியை விட குளிர்சாதனம் 20 மடங்கு எரிசக்தியைப் பயன்படுத்தும்

குளிர் சாதனங்களையே நம்பியிராமல் கட்டட வடிவமைப்பில் வெப்பநிலையைக் குறைவாக வைத்திருக்கும் உத்திகளைப் பயன்படுத்தலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்