Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிங்கப்பூரர்களிடையே அதிகமான ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய 5 உணவுவகைகள்

ஒவ்வாமை என்பது மிகப் பரவலாகக் காணப்படும் பிரச்சினை. பிள்ளைகள், பெரியவர்கள் எனப் பலரிடையே ஏதோ ஒரு  ஒவ்வாமைப் பிரச்சினை இருப்பது வழக்கமாகிவிட்டது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்களிடையே அதிகமான ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய 5 உணவுவகைகள்

(படம்: Reuters/Fabrizio Bensch)

ஒவ்வாமை என்பது மிகப் பரவலாகக் காணப்படும் பிரச்சினை. பிள்ளைகள், பெரியவர்கள் எனப் பலரிடையே ஏதோ ஒரு ஒவ்வாமைப் பிரச்சினை இருப்பது வழக்கமாகிவிட்டது.

Singapore Medical Journal எனும் சிங்கப்பூர் மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வில், குறிப்பாக, சிங்கப்பூரர்களிடையே ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய சில உணவு வகைகள் குறிப்பிடப்பட்டன.

சிங்கப்பூரர்களிடையே அதிகமாக ஒவ்வாமை உண்டாக்கக்கூடிய உணவு வகைகள்:

  • முட்டை

(மிக அதிகமாக, 3 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம் ஒவ்வாமை ஏற்படலாம்)

  • பசும்பால்

(மிக அதிகமாக, 3 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம் ஒவ்வாமை ஏற்படலாம்)

  • சிப்பியுடன் கூடிய கடலுணவு வகைகள் (shellfish)

(பெரியவர்களுக்கும் சிறாருக்கும் ஒவ்வாமை ஏற்படலாம்)

  • நிலக்கடலை (peanut)

(அதிகமாக 4இலிருந்து 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படலாம்)

  • மீன்

(அதிகமாகப் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்; குறிப்பாக 1 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் பாதிக்கப்படலாம்)

ஒவ்வாமையின் அறிகுறிகள்:

  • தும்மல்
  • மூக்கு ஒழுகுதல்
  • சிவந்த கண்கள்
  • நெஞ்சிறுக்கம்
  • அரிப்பு / சொறி ஏற்படுதல்

ஒவ்வாமை ஏற்படும்போது, அது குறித்து மருத்துவரைக் காண்பது அவசியம் எனப் பல மருத்துவ இணையத்தளங்கள் அறிவுறுத்துகின்றன. ஒருவருக்கு எந்தெந்தக் காரணங்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதனைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் பலரும் ஆலோசனை கூறுகின்றனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்