Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிந்த உரிமையாளரை அடையாளம் கண்டு அனுமதிக்கும் Apple நிறுவனத்தின் புதிய மென்பொருள்

Apple நிறுவனம், நேற்று தனது இயங்குதளத்தின் ஆக அண்மைப் பதிப்பான  iOS 13.5-ஐ வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணிந்த உரிமையாளரை அடையாளம் கண்டு அனுமதிக்கும் Apple நிறுவனத்தின் புதிய மென்பொருள்

படம்: REUTERS/Michaela Rehle

Apple நிறுவனம், நேற்று தனது இயங்குதளத்தின் ஆக அண்மைப் பதிப்பான iOS 13.5-ஐ வெளியிட்டுள்ளது.

அந்த மேம்பட்ட மென்பொருள் மூலம், iPhone உரிமையாளர்கள், முகக்கவசம் அணிந்த நிலையிலும் கைத்தொலைபேசியைத் திறந்து பயன்படுத்தமுடியும்.

உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களை அனுமதிக்கும் மென்பொருள்முறை, முகக் கவசங்கள் அறிமுகமானதும் சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டது.

உரிமையாளரை அடையாளம் காணச் சிரமப்படும் கைத்தொலைபேசி, சிறிது தாமதத்துக்குப் பின், Passcode எனப்படும் கடவு எண்ணை உள்ளிடச் சொல்லும்.

அதனால், தொலைபேசியைத் திறப்பதில் தாமதம் நிலவியது. அந்தப் பிரச்சினைக்கு, இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

முக அடையாளத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள iPhone-கள் இப்போது, முக அடையாள நடைமுறையைத் தாண்டிச் சென்று Passcode எனப்படும் கடவு எண்ணைப் பதிவிடச் சொல்லும்.

இந்த வசதி, சுகாதாரத் துறை உள்ளிட்ட முன்னிலைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பெரிய நிம்மதியைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், பெரும்பாலான நேரம் அவர்கள் முகக்கவசம் அணிந்தவாறுதான் பணியாற்றுகிறார்கள்.

iPhone X-முதல், முகத்தை வைத்து அதன் உரிமையாளரை அடையாளம் காணும் வசதியை, Apple நிறுவனம் அறிமுகம் செய்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்