Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆர்னல்ட் ஷ்வாஸனேகரின் சைக்கிளைக் களவாட முயன்ற நபர்

பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஆர்னல்ட் ஷ்வார்ஸனேகரின்(Arnold Schwarzenegger) சைக்கிளை ஆடவர் ஒருவர் திருட முயன்றிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஆர்னல்ட் ஷ்வாஸனேகரின் சைக்கிளைக் களவாட முயன்ற நபர்

(படம்: AFP)

பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஆர்னல்ட் ஷ்வார்ஸனேகரின்(Arnold Schwarzenegger) சைக்கிளை ஆடவர் ஒருவர் திருட முயன்றிருக்கிறார்.

ஆனால், அவரை ஷ்வாஸனேகரின் மெய்காவலர் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்.

திருடனை வளைத்துப் பிடிக்க மின்சாரத் துப்பாக்கியையும் மெய்காவலர் பயன்படுத்தினார்.

கடந்த ஒரு மாதத்தில் ஷ்வார்ஸனேகருக்கு எதிராக நடந்திருக்கும் இரண்டாவது குற்றச் சம்பவம் அது.

71 வயது ஷ்வார்ஸனேகர் அவரது வாட்டசாட்டமான தோற்றத்துக்குப் பெயர்பெற்றவர்.

அவரையே பின்னாலிருந்து எட்டி உதைத்தார், ஓர் ஆடவர்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அந்தச் சம்பவம் நடந்தது.

ஷ்வார்ஸனேகர் தமது ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், ஆடவர் ஒருவர் பின்னாலிருந்து அவரை உதைத்தார்.

அந்த ஆடவர் பிரபலங்களிடம் இதுபோல் நடந்துகொள்ளும் பழக்கமுடையவர் என்பது பின்னால் தெரியவந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்