Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அரிசி அறுவடையாகும் கதை

பொதுவாக விவசாய நிலங்கள் அதிகமுள்ள கிராமப்புறங்களில் பொங்கல் காலத்தில் அறுவடை நடைபெறும். விளைச்சல் நன்றாக இருந்ததற்கு நன்றிகூறும் விதமாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வாசிப்புநேரம் -

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக விவசாய நிலங்கள் அதிகமுள்ள கிராமப்புறங்களில் பொங்கல் காலத்தில் அறுவடை நடைபெறும். விளைச்சல் நன்றாக இருந்ததற்கு நன்றிகூறும் விதமாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

அரிசி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ...

நெற்பயிர்கள் உருவாகக் கிட்டத்தட்ட 120 முதல் 150 நாட்கள் ஆகும். நல்ல விளைச்சல் வேண்டுமானால் போதுமான மழை, நல்ல உரம், சரியான பராமரிப்பு எனப் பல அம்சங்கள் தேவைப்படும்.

முதலில் விவசாயத்திற்கேற்ற வயல் தெரிவு செய்யப்படும். பின்பு அந்த வயல் உழுது விளைச்சலுக்குத் தயார்செய்யப்படும். மண்ணின் தரத்திற்கேற்றவாறு நெல் மணிகளும் தெரிவு செய்யப்படும்.

உழுது பண்பட்ட நிலத்தில் தெரிவு செய்யப்பட்ட விதைகள் தூவப்படும்.

அதன்பின் நீர் பாய்ச்சப்படும். அந்த நீர் வீணாகாமல் இருக்க நிலத்தில் பாத்திகள் கட்டப்படும்.

சில நாள்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும், அதன்பின் அவை செழித்து வளர ஏதுவாக உரம் தூவப்படும்.

அந்த நேரத்தில் வயலில் தேவையில்லாத செடிகொடிகள் வளர்ந்திருந்ததால் அவை அகற்றப்படும். அதைக் களையெடுத்தல் என்பார்கள். அவற்றை விட்டுவைத்தால் நெற்பயிர்கள் வீணாகும்.

விதைகள் முளைத்து வளர்ந்தபிறகு நாற்று நடும் பணி தொடங்கும்.

நாற்று நட்டபின் பயிர்கள் வேகமாக வளரத் தொடங்கும் அந்தக் காலம் மிக முக்கியமானது. அளவுக்கதிகமாக மழை பெய்தாலோ நீரின்றி நிலம் வறண்டுபோனாலோ விளைச்சல் பாதிக்கப்படும்.

பயிர்கள் வளர்ந்து நெல் மணிகள் முத்துமுத்தாகக் காணப்படும்போது அவை வளர்ந்து அறுவடைக்குத் தயாராய் இருப்பதாக அர்த்தம்.

அறுவடை செய்யப்பட்ட பிறகு நெல் மணிகள் ஆலைகளுக்குக் கொண்டுசெல்லப்படும்.

அங்கு நெல் மணிகள் தீட்டப்பட்டு அரிசியாக உருமாறும்.

விதையில் தொடங்கி அறுவடை வரை அரிசியின் பயணத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

மனித உழைப்போடு இயற்கையும் ஒத்துழைக்கும்போது விவசாயிகளின் உழைப்புக்குக் கைமேல் பலன் கிடைக்கிறது.

பலமாத உழைப்பு அறுவடையாகும்போதுதான் அரிசியின் பயணம் நிறைவை எட்டுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்