Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆஸ்துமா நோய்- பொதுவான சிகிச்சை எல்லாருக்கும் வேலை செய்யாது

ஆஸ்துமா என்பது ஒரே பெயரைக் கொண்டதொரு நோய். ஆனால் அதற்கான சிகிச்சை முறை பல விதங்களில் கையாளப்படுகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

ஆஸ்துமா என்பது ஒரே பெயரைக் கொண்டதொரு நோய். ஆனால் அதற்கான சிகிச்சை முறை பல விதங்களில் கையாளப்படுகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுபற்றி The New York Times நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஆஸ்துமா என்பது நெடுங்காலத்திற்கு நீடிக்கும்
சுவாச நோயாகும். அமெரிக்காவில் 5.5 மில்லியன் குழந்தைகள் உட்பட, 25 மில்லியன் பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

1991ஆம் ஆண்டில் ஆஸ்துமா பற்றிய விரிவான வழிகாட்டிகள் வழங்கப்பட்டன. அப்போது எண்ணியதைக் காட்டிலும் ஆஸ்துமா மிகவும் சிக்கலான நோய் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

தற்போதைய புதிய வழிகாட்டியின்படி, ஆஸ்துமா ஒரு நபரின் மரபியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான தொடர்புகளின் விளைவால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பல வேறுபட்ட இயல்புகளை அல்லது phenotypes-ஐ கொண்ட ஒரு நோய்க்குறியாக அது கருதப்படுகிறது.

டிசம்பர் மாதம் Journal Of Allergy And Clinical Immunology இதழில், ஒரு நிபுணர் குழு அந்தப் புதிய 54 பக்க வழிகாட்டியை வெளியிட்டது.

புதிய வழிகாட்டியால், ஆஸ்துமா நோயை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வகையான காரணங்கள், உடலியல் விளைவுகள், சிகிச்சைக்கான வேறுபட்ட அணுகுமுறைகள் ஆகியவற்றைப்
புரிந்துகொள்வதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"அனைவருக்கும் ஆஸ்துமா ஒரேவிதமாக இருக்காது என்பதை அண்மை ஆண்டுகளில் கண்டறிந்தோம். அதற்கு வேறுபட்ட அடிப்படை வழிமுறைகள் உள்ளன. சிகிச்சையளிப்பதற்கான முறையும் மாறிவிட்டது" என்று டென்வரில் உள்ள ஆஸ்துமா நிபுணர் டாக்டர் மைக்கல் வெச்ஸ்லர் (Michael Wechsler) கூறினார்.

பயம், கோபம், உற்சாகம் அல்லது சிரிப்பு போன்ற வலுவான உணர்ச்சிகள், வானிலையில் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றால் கூட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரச்சினைகள் எழலாம் என்று The New York Times தெரிவித்தது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஆஸ்துமா சிகிச்சைக்காக 5 புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன என்றார் டாக்டர் வெச்ஸ்லர்.

லேசான அல்லது கடுமையான ஆஸ்துமாவுக்குச் சிகிச்சை பெறுபவர்களுக்குப் புதிய வழிகாட்டிகள் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய வழிகாட்டிகள் FENO எனும் fractional exhaled nitric oxide அளவீட்டின் மதிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

அது நோயாளிகளின் ஆஸ்துமாவைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக அமைகிறது என்று The New York Times தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்