Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வசூல் மழையில் 'Avengers: Endgame' - 2 பில்லியன் டாலரைத் தொடுமா ?

மார்வெல் ஸ்டுடியோஸின் 'Avengers: Endgame' திரைப்படம் தற்போது வசூல் மழையில் நனைந்து வருகிறது.

வாசிப்புநேரம் -

மார்வெல் ஸ்டுடியோஸின் 'Avengers: Endgame' திரைப்படம் தற்போது வசூல் மழையில் நனைந்து வருகிறது.

மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அந்தத் திரைப்படம் கடந்த வாரம் பில்லியன் டாலர் வசூலை எட்டியது.

தற்போதைய நிலவரப்படி திரைப்படம் உலக அளவில் 1.82 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாகவும், இந்த வார இறுதியின் முடிவில் அது 2 பில்லியன் டாலராக மாறலாம் என்றும் Forbes சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அப்படி சுமார் 2.1 பில்லியன் டாலரை வசூலித்து விட்டால் 'Avengers: Endgame' திரைப்படம் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும்.

தற்போது அது 5ஆம் இடத்தில் உள்ளது.

அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதலிடத்தில் Avatar திரைப்படமும், இரண்டாம் இடத்தில் Titanic திரைப்படமும் உள்ளன.

'Avengers: Endgame' ஏப்ரல் 24ஆம் தேதி சில நாடுகளிலும், ஏப்ரல் 26ஆம் தேதி உலக அளவிலும் வெளியானது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்