Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாடல்களுக்கான தரவரிசையில் 40ஆம் இடத்தைப் பெற்றிருக்கும் "பேபி ஷார்க்" பாடல்

தென்கொரியாவைச் சேர்ந்த Pinkfong எனும் கற்றல் தளம் "பேபி ஷார்க்" என்ற பாடலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டது.

வாசிப்புநேரம் -
பாடல்களுக்கான தரவரிசையில் 40ஆம் இடத்தைப் பெற்றிருக்கும் "பேபி ஷார்க்" பாடல்

(படம்: YouTube)

தென்கொரியாவைச் சேர்ந்த Pinkfong எனும் கற்றல் தளம் "பேபி ஷார்க்" என்ற பாடலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டது.

அதனை அடுத்து அந்தப் பாடல் மிகப் பிரபலமானது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்தப் பாடலைப் பலர் கேட்டிருப்பர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை "பேபி ஷார்க்" பாடலைப் பாடுவதும் அதற்கான சவாலில் ஈடுபடுவதுமாக இருந்தனர்.

அமெரிக்காவில் பிரபலமான Billboard எனப்படும் பாடல்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நேற்று (ஜனவரி 12) "பேபி ஷார்க்" பாடல் 40ஆவது இடத்தைப் பெற்றது.

தற்போது வரை YouTubeஇல் அந்தப் பாடலைக் கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை 2.1 பில்லியனை எட்டியிருக்கிறது.

YouTubeஇல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் அனைத்துக் காணொளிகளிலும் அதிகம் ரசிக்கப்பட்ட 30 காணொளிகளில் ஒன்று "பேபி ஷார்க்."  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்