Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாய்களுக்குக் கொடுக்கப்படும் சமைக்காத இறைச்சியில் கிருமிகள்-ஆய்வாளர்கள் எச்சரிக்கை

நாய்களுக்குக் கொடுக்கப்படும் சமைக்காத இறைச்சியைக் கொண்ட உணவுகளைக் கையாளும்போது சுகாதாரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
நாய்களுக்குக் கொடுக்கப்படும் சமைக்காத இறைச்சியில் கிருமிகள்-ஆய்வாளர்கள் எச்சரிக்கை

( படம்: AFP/WILLIAM WEST )

நாய்களுக்குக் கொடுக்கப்படும் சமைக்காத இறைச்சியைக் கொண்ட உணவுகளைக் கையாளும்போது சுகாதாரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நாய்களுக்கு சமைக்கப்படாத இறைச்சியைக் கொண்ட உணவுகளைக் கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பிரபலமாகி வருகிறது என்று ஸ்வீடனில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திரு இன்க்ரிட் ஹன்ஸ்சோன் கூறியுள்ளார்.

அந்த உணவுப்பழக்கம் இயற்கையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது என்று சிலர் சொல்கின்றனர்.

வேறு சிலரோ அதில் இருக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் ஆபத்தானவை என்று கூறுகின்றனர்.

செல்லப்பிராணி உணவுத் தயாரிப்பாளர்கள் பத்துப்பேர் உற்பத்தி செய்த 60 உறையவைக்கப்பட்ட சமைக்காத இறைச்சியைக் கொண்ட நாய்களுக்கான உணவு மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

அதில், பல மாதிரிகளில் சுகாதாரத் தரநிலைகளை மீறக்கூடிய அளவு கிருமிகள் இருந்தன.

அதனால், சமைக்காத இறைச்சி கொண்ட உணவைச் செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கும் உரிமையாளர்கள், மனித உணவையும் செல்லப்பிராணி உணவையும் பிரித்துக் கையாள்வது அவசியம் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்