Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்க உதவும் தேநீர்

நம்மில் பலர் தேநீரை விரும்பி அருந்துவதுண்டு. தேநீரை வாரத்திற்குக் குறைந்தது 3 முறை குடிப்போர் ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்ட ஆயுள் ஆகியவற்றைப் பெறுவதாகப் புதிய சீன ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிக்க உதவும் தேநீர்

(படம்: AFP/Justin Tallis)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

நம்மில் பலர் தேநீரை விரும்பி அருந்துவதுண்டு. தேநீரை வாரத்திற்குக் குறைந்தது 3 முறை குடிப்போர் ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்ட ஆயுள் ஆகியவற்றைப் பெறுவதாகப் புதிய சீன ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

European Journal of Preventive Cardiology சஞ்சிகையில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஆகிய நோய்கள் இல்லாத சுமார் 100,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தேநீர் அருந்துவோர் மற்றவர்களைவிட ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் உயிர் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில், தேநீர் குடிப்போரிடையே ஒருசில நோய்கள் ஏற்படவே இல்லை என்றும் ஆய்வில் தெரிய வந்தது.

தேநீரை வழக்கமாக அருந்துவோருக்கு இதய நோய் ஏற்படும் சாத்தியம் 20 விழுக்காடு குறைவு. அவர்களுக்கு கடுமையான இதய நோயும் பக்கவாதமும் ஏற்படும் வாய்ப்பு 22 விழுக்காடு குறைவு என்றும் ஆய்வில் கண்டறியட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்