Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிறந்த Selfie இதுவா?

விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் நாளிலேயே பெரிய பரிசு கிடைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிறந்த Selfie இதுவா?

படம்: rogerfederer/Instagram

விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் நாளிலேயே பெரிய பரிசு கிடைத்துள்ளது.

டென்னிஸ் விளையாட்டில் தங்களுக்குகென்று தனியிடத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ்.

ரோஜர் பெடரர் ஆண்கள் பிரிவில் 20 பொது விருதுகளை வென்றவர். செரீனா வில்லியம்ஸ் பெண்கள் பிரிவில் 23 பொது விருதுகளை வென்றிருக்கிறார்.

View this post on Instagram

Oh what a night���� @serenawilliams

A post shared by Roger Federer (@rogerfederer) on

கடந்த செவ்வாய்க்கிழமையன்று Hopman கிண்ணத்திற்கான கலப்பு அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் இருவரும் முதல்முறையாக மோதினர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆட்டம்  இடம்பெற்றது. பெடரர் 4-2 4-3(3) என்ற செட் கணக்குகளில் ஆட்டத்தை வென்றார்.

ஆட்டத்திற்குப் பிறகு நடந்த பேட்டியில் இருவரும் மாறிமாறிப் பாராட்டிக்கொண்டனர்.

பேட்டிக்குப் பிறகு பெடரரும், வில்லியம்ஸூம் இணைந்து ஒரு Selfie எடுத்துக்கொண்டனர்.

அந்தப் படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

டென்னிஸ் ரசிகர்களுக்கு அந்த ஆட்டம் என்றும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்