Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

50 வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனைக்கான ஆய்வு

ஒருவரிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும் முன்னரே அந்தப் பரிசோதனை மூலம் அதனை அடையாளம் காணமுடியும் எனக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் 50 வகைப் புற்றுநோய்களைக் கண்டறியும் ரத்தச் சோதனைக்கான ஆய்வு நடத்தப்படுகிறது.

ஒருவரிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படும் முன்னரே அந்தப் பரிசோதனை மூலம் அதனை அடையாளம் காணமுடியும் எனக் கூறப்படுகிறது.

Grail நிறுவனத்தின் Galleri ரத்தப் பரிசோதனை ஆய்வு, உலகில் இதுவரை இல்லாத அளவில் விரிவானதெனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்திலுள்ள 140,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை அதில் சேர்த்துக்கொள்ள பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை திட்டமிட்டுள்ளது.

அவர்களில் பாதிப்பேரின் ரத்தம், உடனடியாக Galleri பரிசோதனை மூலம் சோதிக்கப்படும்.

அந்த வகைப் பரிசோதனையின் மூலம், புற்றுநோயை இறுதிக் கட்டங்களில் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கலாமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படுவதாக King's College Londonஇன் புற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஆய்வுக்காக Grail நிறுவனம் 7.1 பில்லியன் டாலர் தொகையைப் பெற்றுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்