Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கொரோனா கிருமிப்பரவலுக்கு இடையே உலகில் வாழ ஆகச் சிறந்த இடம் சிங்கப்பூர்: Bloomberg

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் உலகில் வாழ, ஆகச் சிறந்த இடமாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் உலகில் வாழ, ஆகச் சிறந்த இடமாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Bloomberg நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, முதன்முறை, நியூசிலந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூரில், பெரும்பாலும் உள்ளூர் அளவில் கிருமித்தொற்று ஏற்படுவதில்லை என்பதும்; உரிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மக்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்கின்றனர் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முக்கிய அம்சங்களில் அது முக்கியமானது.

நியூஸிலந்து, ஆஸ்திரேலியா, தைவான் ஆகியவற்றில் தடுப்பூசி போடும் பணி சற்று மெதுவாகவே நடக்கிறது.

கொரோனா கிருமிப்பரவலுக்கு இடையே உலகில் வாழ ஆகச் சிறந்த இடங்கள் (சிறந்த 10):

  1. சிங்கப்பூர்
  2. நியூஸிலந்து
  3. ஆஸ்திரேலியா
  4. இஸ்ரேல்
  5. தைவான்
  6. தென்கொரியா
  7. ஜப்பான்
  8. ஐக்கிய அரபு சிற்றரசுகள்
  9. ஃபின்லந்து
  10. ஹாங்காங்

- Bloomberg  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்