Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல் துலக்கும்போது பலர் செய்யும் பொதுவான தவறுகள்

முகத்திற்கு அழகு சேர்ப்பது புன்னகை.

வாசிப்புநேரம் -
பல் துலக்கும்போது பலர் செய்யும் பொதுவான தவறுகள்

(படம்:Pixabay)

முகத்திற்கு அழகு சேர்ப்பது புன்னகை.

புன்னகைக்கு அழகு சேர்ப்பது வலுவான, ஆரோக்கியமான பற்கள்.

பல் துலக்கும்போது செய்யக்கூடாதவை யாவை?

பல் மருத்துவர்கள் கூறும் குறிப்புகள் சில....

(படம்: Pixabay)

படம்: Pixabay

பல் துலக்கிய பின் அதிகம் கொப்பளிக்கக்கூடாது

பல் துலக்கிய பின், நிறையத் தண்ணீரைக் கொண்டு கொப்பளிப்பது, பற்களின் மேற்பரப்பில் உள்ள புளோரைட்டை (fluoride) குறைத்துவிடும்.

அதனால் பற்சொத்தை ஏற்படுவதைத் தவிர்க்கும் புளோரைட்டின் திறனும் குறைகிறது.

குறைவான தண்ணீரைக் கொண்டு கொப்பளிப்பதே சிறந்தது.

(படம்: Pixabay)

Pixabay

எவ்வளவு பற்பசை பயன்படுத்த வேண்டும்?

3 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள், 1,000ppm புளோரைட் அளவு கொண்ட பற்பசையை ஓர் அரிசி அளவு பயன்படுத்தினால் போதும்.

அந்தப் பிள்ளைகள், பற்பசையைத் துப்புவதில் சிரமத்தை எதிர்நோக்கலாம் என்பதால் சிறிய அளவு பற்பசை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

மற்றவர்கள், அதே 1,000ppm புளோரைட் அளவு கொண்ட பற்பசையை, ஒரு பட்டாணி அளவு பயன்படுத்துவது போதுமானது.

விளம்பரங்களில் காட்டுவது போல் அதிகமான பற்பசையைப் பயன்படுத்துவதால் எந்த மருத்துவப் பலன்களும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்