Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதிரடித் திட்டத்துக்குப் பிந்திய ஓராண்டு.. உடல் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதா?

கொரோனா கிருமிப்பரவல் கொடியது... அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டது. 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் கொடியது... அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த ஓராண்டில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அது குறித்து 'செய்தி' கருத்தாய்வொன்றை அதன் Instagram பக்கத்தில் நடத்தியது. அதில் 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

கேட்கப்பட்ட கேள்வி:

கடந்த ஓராண்டில் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதா?

அதன் முடிவுகள்:

  • 59 விழுக்காட்டினர் மேம்பட்டுள்ளது என்றனர்
  • 41 விழுக்காட்டினர் இல்லை என்றனர்

அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் டாக்டர் இந்துமதியிடம் பேசியது 'செய்தி'

கடந்த ஓராண்டில் பெரும்பாலானோரின் உடல் ஆரோக்கியம் எவற்றினால் மேம்பட்டிருக்கலாம்?

  • மக்கள் ஒன்றுகூடாததால் பொதுவாகப் பரவக்கூடிய இருமல், சளி போன்றவை அவர்களிடம் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாகியுள்ளது
  • அதே வேளையில், முகக்கவசம் அணிவதும் கைகளை அடிக்கடி கழுவுவதும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதால் மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்படையவில்லை

இருப்பினும், பலரும் தங்கள் உடல் ஆரோக்கியம் கடந்த ஓராண்டில் குறைந்ததாகக் குறிப்பிட்டனர்... எதனால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம்?

  • ஆரோக்கியம் என்பது வெறும் உடல் ரீதியானதாகக் காணமுடியாது. அதில் மனநலனும் சேர்ந்திருக்கிறது. கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் பலரும் தனிமையில் இருக்கின்றனர்.
  • மனப் பதற்றம் (anxiety) ஏற்படும் சாத்தியம் அதிகம். மனப்பதற்றம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியது. சிலரின் ஆரோக்கியம் குறைவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
  • சிலர் வீட்டில் அதிகமிருப்பதால் ஏற்படும் மனவுளைச்சலைப் போக்க அதிகம் மதுபானம் உட்கொள்கின்றனர்; அல்லது புகைபிடிக்கின்றனர். இதனாலும் ஆரோக்கியம் பாதிப்படையலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்