Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடனே செய்யவேண்டியதைத் தள்ளிப்போடாதீர்கள்!

நம் அன்றாட வாழ்க்கையில் ஒருசில "சிறிய" வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கலாம். 

வாசிப்புநேரம் -

நம் அன்றாட வாழ்க்கையில் ஒருசில "சிறிய" வேலைகளைத் தள்ளிப்போடும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கலாம். 

பிறகு செய்துகொள்ளலாம்; இப்போது என்ன அவசரம் என்று நினைக்கலாம்.

அந்தச் "சிறிய" வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பதால் பெரிய மனஉளைச்சல்களைத் தவிர்க்கலாம் என்று Readers Digest இணையச் சஞ்சிகை அண்மையில் ஆலோசனை கூறியது. 

அதன் சாரத்தை வழங்குகிறது 'செய்தி'.

எந்தச் "சிறிய" வேலைகளை உடனே செய்துமுடிக்கவேண்டும்? ஏன்? :

  • குளிர்ப்பதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல்:

இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்று. அதில் உணவு போன்ற முக்கியப் பொருள்களை வைக்கிறோம். அசுத்தமடையும்போது அதில் கிருமி பரவலாம்.

எனவே அடிக்கடி பெட்டியைச் சுத்தம் செய்யுங்கள். ஆண்டிற்கு ஒரு முறையாவது அதை முழுவதுமாகச் சுத்தம் செய்யுங்கள்.

  • ஆவணங்களைக் கோப்பில் வரிசைப்படுத்துதல்

கட்டணச் சீட்டுகள், வீட்டுப் பத்திரங்கள், உணவு செய்முறைப் பட்டியல், வேலையிட ஆவணங்கள் போன்றவற்றை உடனுக்குடன் வரிசைப்படுத்தி அடுக்கிக் கோப்புகளில் வைக்கவில்லையெனில் அவை குவிந்து காணப்படுவதோடு, தேவைப்படும்போது தேடுவதற்குக் கடினமாகும்.

  • முக்கியமான மின்னிலக்கப் படங்களைப் பாதுகாத்தல்

தற்போதுள்ள சூழலில் அதிகமானோர் தங்கள் திறன்பேசிகளில் ஏராளமான படங்களைப் பதிவுசெய்கின்றனர். அவற்றை உடனுக்குடன் வேறு இடத்தில் சேமிப்பது முக்கியம். இல்லைெயெனில் திறன்பேசி திடீரெனப் பழுதாகும்போது படங்களை இழக்கக்கூடும்.

  • மின்னஞ்சல்களுக்கு உடனே பதில் அனுப்பலாம்

பலரும் மின்னஞ்சல்களை வாசித்தவுடன் அவற்றுக்குப் பதிலளிப்பதைத் தள்ளிப்போடுவதுண்டு. பிறகு இன்னொரு முறை அதை வாசித்துப் பதில் அனுப்புவதால் நேரம் வீணாகும். உடனே வாசித்து, உடனே பதில் அனுப்புவது நல்லது. 

  • தேவையான மளிகைப் பொருள்களைப் பட்டியலிடுங்கள்

மளிகைப் பொருள்களைக் கடைக்குச் சென்று வாங்கும் முன்னர், வீட்டில் என்ன இருக்கிறது, என்ன தேவைப்படுகிறதென்று பட்டியலிட்டால் வீண்செலவைக் குறைக்கலாம். அதோடு தேவையற்றவற்றைக் கடையில் வாங்கி வீடுவரை தூக்கி வந்து இடத்தை அடைப்பதையும் தவிர்க்கலாம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்