Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீண்ட விடுமுறைக்குப்பின் வேலைக்குத் திரும்பும்போது உங்கள் இடம் சுத்தமாக இருக்காது!

நாம் விடுமுறையில் சென்றுவிடுகிறோம். நாம் விட்டுச்சென்ற மேசைப்பகுதி எந்த அளவுக்குக் கிருமி சேர்ந்து அழுக்காக இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?

வாசிப்புநேரம் -
நீண்ட விடுமுறைக்குப்பின் வேலைக்குத் திரும்பும்போது உங்கள் இடம் சுத்தமாக இருக்காது!

(படம்: Unsplash/Robert Bye)

நாம் விடுமுறையில் சென்றுவிடுகிறோம். நாம் விட்டுச்சென்ற மேசைப்பகுதி எந்த அளவுக்குக் கிருமி சேர்ந்து அழுக்காக இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?

இதைப் படித்தால் விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்பும்போது கிருமிநாசினியோடுதான் செல்வீர்கள்.

நீண்ட விடுமுறை முடிந்து வரும்போது நாம் செய்யும் முதல் வேலை குவிந்துகிடக்கும் மின்னஞ்சல்களைப் படித்துத் தேவையில்லாவற்றை நீக்கிச் சுத்தம்செய்வதுதான்.

அதேநேரம் நாம் அலுவலகத்தில் அடிக்கடி புழங்கும் இடங்களில் கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு கிருமி சேர்ந்திருக்கும் தெரியுமா?

உதாரணத்திற்கு, அலுவலகத்தின் உணவுப்பொருள் வைத்திருக்கும் அறையில் (pantry) சுத்தம்செய்யப் பயன்படுத்தும் பஞ்சு.

அலுவலகக் கழிவறைத் தொட்டியின் அமரும் இருக்கையைவிட அந்தப் பஞ்சு அதிகக் கிருமி சேர்ந்திருக்கும்.

நாம் இல்லாத நேரத்தில் கிருமி குடியேற ஆரம்பிக்கும்.

நாளாக ஆக கிருமியின் வீரியம் அதிகரிக்கும்.

வேலைக்குத் திரும்பும்போது கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமிகளை கவனிக்காமல் விட்டால் அவை வேலையைக் காட்டிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மின்தூக்கிப் பொத்தான், கதவுக் கைப்பிடி, கணினியின் விசைப்பலகை, கணினிச் சுட்டி(mouse) இப்படிப் பலவற்றில் கிருமி குடிகொண்டிருக்கும்.

விடுமுறை முடிந்து திரும்பும்போது வேலையைத் தொடங்குவதற்குமுன் ஒரு சுத்தமான ஈரத் துணியைக் கொண்டு மேசையில் இருக்கும் பொருட்களைத் துடைத்தெடுங்கள்.

அதன்பிறகு உலர்ந்த துணியால் துடைக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஈரத்துணியால் துடைப்பதற்குமுன் அதைச் சலவைத்தூள் கலந்து தண்ணீரில் நன்கு அலசவேண்டும்.

உணவுப்பொருள் வைத்திருக்கும் பகுதிக்குச் சென்றால் அங்கிருக்கும் கரண்டி போன்றவற்றை நன்கு தேய்த்துக் கழுவிவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.

நாம் இல்லாதபோது கைபடாமல் இருக்கும் பல பொருட்கள் சுத்தமாக இருப்பதாகவே நினைக்கிறோம்.

அது தவறு என்கின்றனர் நிபுணர்கள்.

மூலம்: CNA Lifestyle 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்