சீனப் புத்தாண்டு பாரம்பரியங்கள்
சீனப் புத்தாண்டின் முக்கியப் பாரம்பரியங்களில், சீனர்களின் ஒன்றுகூடல் விருந்தும் (reunion dinner) ஒன்றாகும்.
சீனப் புத்தாண்டின் முக்கியப் பாரம்பரியங்களில், சீனர்களின் ஒன்றுகூடல் விருந்தும் (reunion dinner) ஒன்றாகும்.
விருந்தில் குடும்பத்தினர் அனைவரும் கூடி இரவு உணவை உண்டு மகிழ்வது வழக்கம். அந்த நிகழ்வு குடும்ப உறவுகளையும் பிணைப்பையும் வலுப்படுத்த கை கொடுக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இந்த விருந்தில் கலந்துகொள்ள வீடு திரும்புவர்.
மறைந்த முன்னோர்களையும் விருந்தில் கலந்துகொள்ள சில சீனக் குடும்பங்கள் அழைப்பது வழக்கமானது. குலதெய்வங்களை வழிபடுவதற்கு வைக்கப்படும் மேடையில் அவர்கள் படையலிட்டு முன்னோர்களை அழைப்பர்.
சீனப் புத்தாண்டிற்கு முன்தினம், மகன்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வர். அதேபோல திருமணமான மகள்கள், கணவரின் குடும்பத்தினரோடு ஒன்றுகூடல் விருந்தில் கலந்துகொள்வர்.
விருந்தில் பரிமாறப்படும் உணவிலும் சீனர்கள் அதிக கவனத்தைச் செலுத்துவர். கடலுணவைக் கொண்டு சமைக்கப்படும் உணவு வகைகள் அதிகமாக விருந்தில் உண்ணப்படும்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் சிறப்பாக yusheng உணவு பரிமாறப்படும்.
Lo hei என்றும் அழைக்கப்படும் Yusheng உணவில் வெள்ளை முள்ளங்கி, காரட், வெள்ளரிக்காய், சமைக்கப்படாத மீன், எள் விதைகள், இஞ்சி என பல அம்சங்கள் அடங்கியிருக்கும்.
குடும்பத்தினர், மேசையின் நடுவில் Yusheng கொண்ட தட்டை வைத்து உணவைத் தூக்கிக் கலப்பது வழக்கம்.
அவ்வாறு, தூக்கித் தூக்கிக் கலக்கும்போது அவர்கள், விருந்தில் கூடிய உறவினர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைச் சத்தமாகக் கூறி மகிழ்வர்.
பாரம்பரியமாக, yu sheng உணவு உயரமாகத் தூக்கிக் கலக்கப்படும். அவ்வாறு செய்வது அந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தை உயர்த்தும் என்பது சீனர்களின் நம்பிக்கை.