Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காப்பி குடிப்பதால், ஆயுள் அதிகரிக்குமா?

காப்பி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி...

வாசிப்புநேரம் -

காப்பி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி...

காப்பி குடிப்பதற்கும் நோய்வாய்ப்படும் அபாயம் குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Parkinson’s நோய், இதய நோய், நீரழிவு, மனச் சோர்வு, கல்லீரல் புற்றுநோய் போன்ற அபாயம் காப்பி குடிப்பதால் குறைகிறதாம்.

ஒரு நாளைக்கு சுமார் 400 மில்லிகிராம் காப்பி குடிப்பதற்கும் இறப்பு விகிதம் குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி The New York Times செய்தி வெளியிட்டுள்ளது.

அளவாகக் காப்பி குடிப்பவர்களிடையே, தற்கொலை அபாயம் 50 விழுக்காடு குறைந்ததாக அது சொன்னது.

அதற்காக, காப்பி குடித்தால், நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல.

அளவோடு காப்பி குடிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எனினும், காப்பி குடிப்பதால், சில சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்கிறது The New York Times.

கர்ப்ப காலத்தின்போது காப்பி குடித்தால், கருச்சிதைவு, எடை குறைவான பிள்ளை, குறைப்பிரசவம் உள்ளிட்ட அபாயம் அதிகரிக்கலாம்.

தூக்கமின்மை ஏற்படலாம்.

காப்பியில் உள்ள மற்ற ரசாயனங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

அதனால், அளவோடு காப்பி குடிப்பதே சிறப்பு என்று அறிவுறுத்தப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்