Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இயற்கை உரம் - ஏன் முக்கியமானது? அதை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது?

இயற்கை உரமான Compost கலப்பு உரம், ஒருவகையான கலவை. அதைப் பார்ப்பதற்குப் பொதுவாக, பழுப்பு நிறத்தில் மண் போன்று இருக்கும். 

வாசிப்புநேரம் -

இயற்கை உரமான Compost கலப்பு உரம், ஒருவகையான கலவை. அதைப் பார்ப்பதற்குப் பொதுவாக, பழுப்பு நிறத்தில் மண் போன்று இருக்கும்.

உரம் ஏன் முக்கியமானது?

இயற்கையில் தோன்றும் உரம், மண்ணின் இயல்பை மேலும் வளமாக்கும். உரத்தின் காரணமாக, மண் சரியான அளவில், சத்து, வாயு, ஈரப்பதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

அதைக் கொண்டு வீட்டில் உள்ள செடிகளை, மேலும் சிறப்பாக வளர்க்கலாம்.

கலப்பு உரத்தை விவசாயிகள், கறுப்புத் தங்கம் என்று வருணிப்பதுண்டு.

காடுகளில் இயற்கையாகவே உருவாகும் உரத்தை, வீடுகளிலும் தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டத்தை ஒட்டி, தேசியப் பூங்காக் கழகம் உரம் தயாரிப்பது பற்றிய தகவல்களை அதன் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேவையான பொருள்கள்:

  • பழுப்பு நிறமான மரக்குச்சிகள், காய்ந்த சருகுகள், புல், மரச் செதில்-போன்றவை.
  • பழங்கள், காய்கறிகளின் வேண்டாத பாகங்கள். சீவி எறியப்பட்ட தோல், விதை, கெட்டுப் போன பழங்கள், காய்கறிகள் போன்றவை

இரு வழிகள்

உரத் தயாரிப்பில் இரண்டு வழிகள் உண்டு - காற்றுள்ள இடத்தில் உரம் தயாரிப்பது; காற்றுப் புக முடியாத வகையில் உரம் தயாரிப்பது.

காற்றுள்ள இடத்தில் உரம்

ஒரு பெட்டியில் துவாரங்களை அமைக்கவேண்டும்.

துவாரங்களின் மூலம் காற்று நுழைந்து வெளியேற வழியிருக்கும்.

இதில் தயாரிக்கப்படும் உரம், துர்நாற்றமில்லாமல் அமிலத்தன்மை, காரத்தன்மை இரண்டிலும் சமநிலையைக் கொண்டிருக்கும்.

காற்றுப்புகாத இடத்தில் உரம் தயாரித்தல்

முழுக்கமுழுக்க மூடப்பட்ட பெட்டி - இதில் தயாராகும் உரம், அதிகமான அமிலத்தன்மையுடன் இருக்கும்; அதிலிருந்து துர்நாற்றம் வரும்.


உரம் தயாரிப்பது எப்படி?

  1. காற்றுடன்/காற்றில்லாமல் உரம் தயாரிப்பதற்கு ஏற்ப, பெட்டிகளைத் தயார் செய்யுங்கள்
  2. வீட்டில் சூரிய வெளிச்சம் வரும் பகுதியில் அந்தப் பெட்டியை வைக்கவும்; அதனைச் செங்கற்களின் மேல் வைப்பது நல்லது.
  3. தேவையான பொருள்களில் - பழுப்பு, பச்சை நிறத்திலானவை சமமான அளவில் இருக்கவேண்டும். அவற்றைப் பெட்டியில் வைக்கவும். அவற்றுடன், கொஞ்சம் மண்ணையும் சேர்க்கவும். அதன் மூலம் கலவையில் நுண்ணுயிர்கள் இருக்கும்.
  4. அந்தக் கலவையில் தண்ணீரைச் சேர்க்கவும். ஈரப்பதம் ஓரளவுக்கு இருக்கும் வரை தண்ணீர் சேர்க்கவும், ஆனால், அதிக அளவிலான தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும். கலவையை நன்கு கிளறி விடவும்.
  5. ஒவ்வொரு வாரமும், மேலும், பழுப்பு, பச்சை நிறத்திலான கழிவுப் பொருள்களைச் சேர்த்து, கலவையைக் கிளறி விடலாம்... ஆனால், கலவையில் ஈரப்பதம் தொடர்ந்து இருக்க, மேலும் தண்ணீரைச் சேர்க்கவேண்டும்.
  6. காற்றுப்புக முடியாத பெட்டியிலுள்ள கலவையின் வெப்பநிலை சுமார் 70 டிகிரி வரை இயற்கையாகவே அதிகரிக்கும். அப்படி வெப்பநிலை அதிகரிப்பதனால், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் நீக்கப்படும்.

உரம், அடர்த்தியான பழுப்பு நிறத்தில், மென்மையாகக் காணப்படும். அதனை உருவாக்கச் சுமார் 3இலிருந்து 6 மாதங்கள்வரை பிடிக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்