Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுற்றுப்பயணப் பிரியர்கள்... உலகில் அடுத்து எங்கே செல்லலாம்?

சில நாடுகள் மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பயணப் பிரியர்கள் எங்கே செல்லலாம்...

வாசிப்புநேரம் -

இத்தாலி

இத்தாலி மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளிநாடுகளிலிருந்து அங்குச் செல்லும்போது தங்களைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை. தங்குதடையின்றி சுற்றுலா செல்லலாம்.

அங்குச் செல்வோருக்கு ஒரே ஓர் ஆபத்துதான் உள்ளது; உங்கள் உடல் எடையும் இடையின் அளவும் கூடும்!- என்று வேடிக்கையாகக் கூறுகிறார் கலெப்ரியா (Calabria) ஆளுநர்.

அதோடு, சிசிலி தீவுக்குச் இந்த வருடம் செல்வோர் விமானக் கட்டணத்தில் பாதியைச் செலுத்தினால் போதும். கட்டணத்தின் மீதியை அந்தத் தீவின் அரசாங்கம் கட்டும்.


போர்ச்சுகல்

மார்ச் மாதத்திலேயே கட்டுப்பாடுகளைச் சற்றுத் தளர்த்தியது போர்ச்சுகல். மார்ச் மாத நடுவில், போர்ச்சுகலில் சில கடைகளும் உணவகங்களும் திறக்கப்பட்டன.

இந்தக் காலக்கட்டத்தில், ஐரோப்பிய நாடுகளிலேயே, சுற்றுப்பயணிகளை வரவேற்ற முதல் நாடாகப் போர்ச்சுகல் திகழ்கிறது. பயணிகளுக்கு அங்குள்ள விமான நிலையங்களில் COVID-19 பரிசோதனை இடம்பெறும்.


கிரீஸ்

ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று கிரீஸ், வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது. தற்போது ஏதன்ஸ், பிற நாடுகளிலிருந்து விமானங்களின் வருகையை அனுமதித்துள்ளது.

ஆனால் அதிக நோய்ப்பரவல் உள்ள இடங்களிலிருந்து வருவோருக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

மற்ற நாடுகளிலிருந்து வருவோர் பரிசோதிக்கப்படலாம்; ஆனால் கட்டாயமில்லை.


ஜமைக்கா

இந்த வாரம் ஜமைக்கா, சுற்றுப்பயணிகளை வரவேற்றது. ஆனால் புதிதாய் உருவாக்கப்பட்ட அதன் COVID-19 சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளின் பட்டியல் சுமார் 100 பக்கங்கள் உள்ளன!

போக்குவரத்து, சுற்றுலா, தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற சுற்றுப்பயண அம்சங்களைப் பற்றிய விதிமுறைகளை அந்தப் பட்டியல் உள்ளடக்கியுள்ளது.


ஐஸ்லந்து

இந்த வாரம் ஐஸ்லந்து தன் கதவுகளைப் பயணிகளுக்குத் திறந்தது.

COVID-19 பரிசோதனைக்குப் பின் நோயற்றவர்கள் தனிமைப்படுத்தும் உத்தரவின்றி ஐஸ்லந்தில் சுற்றுலா செல்லலாம். ஆனால், நோயுள்ளவர்கள், 14 நாள்கள் தனிமைப்படுத்தும் உத்தரவைப் பெறுவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்