Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன?

பயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
பயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன?

(படம்: Pixabay)

Consumer Price Index (CPI) எனப்படும் பயனீட்டாளர் விலைக் குறியீடு, குடியிருப்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதிகமாக வாங்கும் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் சராசரி விலை மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஒரு மதிப்பீட்டு முறை.

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களின் விலையில் ஏற்படுகின்ற பணவீக்கத்தை அளவிட CPI அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மதிப்பீட்டு முறை, சிங்கப்பூரர் அல்லது நிரந்தவாசிகளைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள் செய்த செலவின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

வருமான வரி, கடன் அடைமானத் தொகை, வீட்டு அடைமானத் தொகை, பங்குகள் உள்ளிட்ட ஏனைய நிதிச் சொத்துகளுக்குச் செலுத்தும் பணம், அந்தச் செலவில் சேர்க்கப்படமாட்டாது.

வாகனம், கருவிகள், உணவு, ஆடைகள் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும் பணம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2019ஆம் ஆண்டின் பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் மொத்தம் 6,800 வகையானை பொருள்கள் உள்ளடக்கப்பட்டன.

சிங்கப்பூரில், பயனீட்டாளர் விலைக் குறியீடு ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறது.

ஆண்டின் 12 மாத விலைக் குறியீட்டின் சராசரியைக் கொண்டு, வருடாந்தரப் பயனீட்டாளர் விலைக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்