Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புல்புல், ஹகிபிஸ், பைலூ...சூறாவளிகள் எப்படிப் பெயரிடப்படுகின்றன?

கேத்ரினா, ரீட்டா, இடாய், பபுக், கொங்ரே, கஜா, ட்ராமி, மங்கூட், புல்புல், ஹகிபிஸ், பைலூ ... இப்படிச் சூறாவளிக்குப் பெயர் சூட்டப்படுகிறது.

வாசிப்புநேரம் -
புல்புல், ஹகிபிஸ், பைலூ...சூறாவளிகள் எப்படிப் பெயரிடப்படுகின்றன?

படம்: AFP


கேத்ரினா, ரீட்டா, இடாய், பபுக், கொங்ரே, கஜா, ட்ராமி, மங்கூட், புல்புல், ஹகிபிஸ், பைலூ ...
இப்படிச் சூறாவளிக்குப் பெயர் சூட்டப்படுகிறது.

இவை எந்த அடிப்படையில் சூட்டப்படுகின்றன? இதை யார் சூட்டுகிறார்கள்? ஏன் பெயர் சூட்டவேண்டும்? இதன் வரலாறு என்ன? சற்று ஆராய்ந்தோம்!

  1. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அட்லாண்டிக் கரையோரம் உருவான சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியதாய்க் கூறப்படுகிறது.
  2. சூறாவளி உருவாகும் நாளன்று கத்தோலிக்க நாள்காட்டியில் எந்தத் துறவியின் பெயர் உள்ளதோ அந்தப் பெயர் சூட்டப்பட்டதாம்.
  3. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சூறாவளிக்குப் பெண்களின் பெயரைச் சூட்டும் வழக்கம் தோன்றியது.
  4. 1960கள்,70களில் அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு முதல் ஆண் பெயர்களும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவை ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் பட்டியலிடப்பட்டன.
  5. இருப்பினும், சிறிய சூறாவளிகளுக்கும் பெயர் சூட்டும் வழக்கம் அண்மை ஆண்டுகளாகவே தோன்றியுள்ளது.
  6. தற்போது மணிக்குக் குறைந்தது 61 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சூறாவளிக்குப் பெயரிடப்படுகிறது.
  7. அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், தென் சீனக் கடல் என்று எந்த வட்டாரத்தில் சூறாவளி உருவாகிறதோ அந்த வட்டார நாடு ஒன்றின் வானிலை ஆய்வகம் பட்டியலிலிருந்து பெயரைத் தேர்ந்தெடுக்கிறது.
  8. சூறாவளிக்குப் பெயரிடுவதன் மூலம் அவற்றை வேறுபடுத்துவதும், அது குறித்த விவரங்களைத் தொகுத்து ஆராய்வதும், அதைக் குறிப்பிடுவதும் எளிதாக இருக்கிறது.
  9. சிறிய அளவிலான சூறாவளிகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் மறுபடியும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள் குறித்த விவரங்களை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் என்பதால், அவை மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை.









 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்