Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தீபாவளியன்று ஆடைக்கேற்ற முகக்கவசம் அணிந்து அசத்துவது எப்படி?

தீபாவளி வந்துவிட்டது! அதற்கான புத்தாடைகளைச் சிலர் வாங்கிவிட்டனர்...சிலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

தீபாவளி வந்துவிட்டது! அதற்கான புத்தாடைகளைச் சிலர் வாங்கிவிட்டனர்...சிலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆடைகளைப் பார்த்து பார்த்து வாங்குகிறோம்.

அழகான ஆடைகளுடன், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் சாதாரண முகக்கவசங்களை அணியலாமா?

பொருத்தமான முகக் கவசங்களைத் தெரிவு செய்ய சில குறிப்புகளைத் தருகிறது /MA:SK/ நிறுவனம். அவை உங்களுக்கு உதவலாம்:

  • நிறம்!

வண்ணமயமான இந்திய ஆடைகளுக்கேற்ப முகக்கவசத்தில் மிக முக்கியமானது நிறம்.

உதாரணம்: ஊதா நிற ஆடைக்கு ஊதா நிற முகக்கவசம்.


  • அலங்கார அம்சங்கள்
படம்: /MA:SK/

படம்: /MA:SK/

இந்திய ஆடைகளில் மின்னும் கண்ணாடி, மினுக்கும் ஜிகினா, ஜொலிக்கும் தங்க நிற நூல் போன்றவை முக்கிய அலங்கார அம்சங்களாக இருக்கலாம். அவற்றுக்கேற்ப, அப்படிப்பட்ட அலங்காரம் கொண்ட முகக்கவசங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


  • அதிக விலை கொடுத்து முகக்கவசம் வாங்கமுடியாதவர்களுக்கு...
படம்: /MA:SK/

படம்: /MA:SK/

இருக்கவே இருக்கிறது... முகக்கவசங்களுக்கான சங்கிலி! முகக்கவசத்துடன் சேர்த்து இணைக்கக்கூடிய மலிவான சங்கிலியைப் பயன்படுத்தி எளிமையான முகக்கவசங்களை எழில்மிக்கவையாக மாற்றியமைக்கலாம்!


  • பொருத்தம்
படம்: /MA:SK/

படம்: /MA:SK/

நிறைய அச்சு வடிவமைப்புகள் கொண்ட இந்திய ஆடைகளுடன் அதிக வடிவங்கள் கொண்ட முகக்கவசம் அணிந்தால் பார்ப்போர் எதைக் கவனிக்கவேண்டும் என்பதில் குழப்பமடைவர்...எனவே பொருத்தமான முகக் கவசம் மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வைக்கும்.


  • துணி
படம்: AFP

படம்: AFP

உங்களுக்கு வசதியாக இருப்பவற்றை அணிந்தால் நீங்கள் கண்ணுக்கு அழகாய்த் தெரிவீர்கள். அதனால் நிறம், வடிவம் போன்றவற்றுடன், உங்கள் சருமத்துக்கு ஏற்ற துணிகளில் தைக்கப்பட்ட முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்