Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

போதுமான உறக்கம் இல்லாத நடுத்தர வயதினருக்கு, மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம்: ஆய்வு

போதுமான உறக்கம் இல்லாத நடுத்தர வயதினருக்கு, மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம்: ஆய்வு

வாசிப்புநேரம் -

50 அல்லது 60 வயதைத் தொட்டவர்கள் ஆறு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்கினால், dementia எனும் மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வில் பிரிட்டனைச் சேர்ந்த கிட்டத்தட்ட 8,000 பெரியவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணிக்கப்பட்டனர்.

நீண்டகாலமாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வயதாகும்போது, தூக்கத்திற்கும் முதுமை மறதி நோய்க்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 20ஆம் தேதியன்று, Nature Communications எனும் ஆய்விதழில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது.

7 மணி நேரம் தூங்குபவர்களைவிட, இரவில் ஆறு அல்லது அதற்கும் குறைவான மணிநேரம் தூங்கும், 50 அல்லது 60 வயதைத் தொட்டவர்களுக்கு dementia ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடிக்கடி குறுகிய நேரமே தூங்கும், 50 முதல் 70 வயது உடையோருக்கு, dementia நோய் ஏற்படுவதற்கான ஆபத்து 30 விழுக்காடு அதிகம் என்று கூறப்படுகிறது.

- AFP/lk 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்