Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயன்படுத்தாத மின்கம்பிகள், மின்கலன்கள் என்று ஏகப்பட்ட குப்பையா?

மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான நிழற்படங்களையும், ஆவணங்களையும் அன்றாடம் சேகரிக்கிறோம். வீட்டில் அதேபோல, பழைய கைத்தொலைபேசிகள், பல ஆண்டுகள் பயன்படுத்தாத கம்பிகள், மின்கலன்கள் ஆகியவற்றையும் வைத்திருப்போம்.

வாசிப்புநேரம் -

மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான நிழற்படங்களையும், ஆவணங்களையும் அன்றாடம் சேகரிக்கிறோம். வீட்டில் அதேபோல, பழைய கைத்தொலைபேசிகள், பல ஆண்டுகள் பயன்படுத்தாத கம்பிகள், மின்கலன்கள் ஆகியவற்றையும் வைத்திருப்போம்.

இவ்வாறு, மின்னியல் குப்பைகள் குவிந்துகொண்டே போகும். அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது? அவற்றை எவ்வாறு வகைப்படுத்தி வைத்துக்கொள்வது?

இதோ சில வழிகள்...


1) தூக்கி எறிய மனமில்லையா?

வீட்டில் மின்னியல் சாதனங்களுக்கு மின்னூட்ட வெவ்வேறு கம்பிகள் தேவை. கேமரா, கைப்பேசி, மடிக்கணினி என்று அனைத்துக்கும் வைத்திருக்கும் மின் கம்பிகள் பல முறை ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டு குப்பையைப் போல் கிடக்கும்.

---முதலில், எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு வேண்டாததைத் தூக்கி எறிய வேண்டும். சில கம்பிகளுக்கு என்ன பயன் உள்ளது என்பது மறந்துவிடும். அவற்றையும் தூக்கி எறிவதே நல்லது.

---அந்தக் கம்பியைப் பயன்படுத்துவதற்கான தேவை பின்னர் ஏற்பட்டால், கம்பியைத் தூக்கி எறிந்துவிட்டோமே என்று கவலைப்படாமல் புதிய கம்பியை வாங்கலாம்.

---எதிர்காலத்தில் கம்பி தேவைப்படுமோ என்று எண்ணிக் கம்பியைத் தொடர்ந்து வைத்துக்கொள்ளவேண்டாம். ஆறு மாதங்களுக்கு மேல் கம்பிகளைப் பயன்படுத்தவில்லை என்றால், அவற்றைத் தூக்கி எறியலாம்.

---தூக்கி எறியும்போதும் மின்னியல் குப்பைகளுக்கான தனிப்பட்ட இடத்தில் மட்டுமே எறிவது நல்லது.

2) மின்னியல் சாதனங்கள், அவற்றுக்குத் தேவைப்படும் கம்பிகள், மின்கலன்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைக்கவேண்டும்.

ஒரே இடத்தில் சாதனங்களையும் அவற்றுக்குத் தேவைப்படும் பொருள்களையும் அடுக்கி வைக்கலாம்.

அவற்றை வகைப்படுத்தி வெவ்வேறு பெட்டிகளில் வைப்பது சிறந்தது. தேவைப்படும்போது அவற்றை எங்கே சென்று எடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரியும்.

3) கம்பிகள் தெரியாமல் அழகாக வைத்திருக்கலாம்.

கம்பிகளைத் தரையில் படாமல் அழகாக வைத்திருக்க அவற்றைக் கட்டி மறைத்து வைக்கலாம்.

அவற்றை இறுக்கிப் பிடிக்கும் சில கம்பிகளைக் கொண்டு கட்டி வைப்பதும் அவற்றை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

4) கைப்பேசி, மடிக்கணினிகளில் தேவையற்ற ஆவணங்களை அகற்றிவிடலாம்

--பல ஆண்டுகளாக திறக்கப்படாத ஆவணங்கள், தேவையற்ற செயலிகள் ஆகியவற்றை அவ்வப்போது அகற்றுவது அவசியம்.

--பிடிக்காத காணொளிகள், படங்கள் ஆகியவை திறன்பேசிகளில் அதிக இடத்தைத் தேவையில்லாமல் எடுத்துக்கொள்ளும். அவற்றையும் அகற்றவேண்டும்.

--சில நேரங்களில் ஒரே படத்தை பலமுறை எடுத்திருப்போம். அதில் பிடித்த ஒன்றை வைத்துக்கொண்டு, எஞ்சியதை அழித்துவிடுவது நல்லது.

---வரிசையில் நிற்கும்போது, பேருந்துக்கு, ரயிலுக்குக் காத்திருக்கும்போது தேவையற்ற படங்களை அகற்றுவது சுலபமாக இருக்கும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்