Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிராட்டா, சாத்தே விற்கும் டிஸ்னி கேலிச்சித்திரங்கள்

இளமையில் நாம் பார்த்த கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் இப்போது உள்ளூர் சுவையைத் தழுவியுள்ளன.

வாசிப்புநேரம் -
பிராட்டா, சாத்தே விற்கும் டிஸ்னி கேலிச்சித்திரங்கள்

படம்: Disney Channels SEA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இளமையில் நாம் பார்த்த கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் இப்போது உள்ளூர் சுவையைத் தழுவியுள்ளன.

சிங்கப்பூர், மலேசியச் சூழலை மையமாகக் கொண்டுள்ளது புதிய Mickey Go Local கேலிச்சித்திரத் தொடர். பிரபலக் கதாபத்திரங்கள் மிக்கி மவுஸ் (Mickey Mouse), டோனல்ட் டக் (Donald Duck), கூஃபி (Goofy) ஆகியவை தொடரில் இடம்பெறுகின்றன.

கேலிச்சித்திரக் காணொளியில் மிக்கி மவுஸ் சாத்தே விற்பவராகவும், டோனல்ட் டக் பிராட்டா விற்பவராகவும் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூர், மலேசியாவின் உணவு, கட்டடக்கலை, மொழிகள், பாரம்பரிய ஆடைகளை ஒட்டிக் கேலிச்சித்திரக் காணொளிகள் அமையும்.

அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு கேலிச்சித்திரக் காணொளி, டிஸ்னி ஒளிவழியிலும் சமூக ஊடகங்களிலும் இடம்பெறும்.

காணொளித் தொடர் முழுக்க முழுக்கத் தென் கிழக்காசியாவில் தயாரிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்