Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

லண்டனில் வானில் மிதக்கும் அதிசய நீச்சல்குளம்

வானில் மிதக்கும் அதிசய நீச்சல்குளத்தைப் பார்த்ததுண்டா?

வாசிப்புநேரம் -
லண்டனில் வானில் மிதக்கும் அதிசய நீச்சல்குளம்

படம்: AFP

வானில் மிதக்கும் அதிசய நீச்சல்குளத்தைப் பார்த்ததுண்டா?

ஆம், தென்மேற்கு லண்டனின் இரண்டு உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு
இடையில் நிறுவப்பட்ட நீச்சல்குளம் பிரபலமடைந்து வருகிறது.

உலகின் முதல் நீச்சல்குளப் பாலம் என்றும் மிகப்பெரிய அக்ரிலிக் (acrylic) குள அமைப்பு என்றும் ஊடக அறிக்கைகள் அதைப் பாராட்டுகின்றன.

ஆடம்பரக் குடியிருப்புப் பேட்டையான எம்பஸி கார்டன்ஸில் (Embassy Gardens), 25 மீட்டர் நீளமுள்ள 'ஸ்கை பூல்' (Sky Pool) அமைந்துள்ளது.

அதில் நீச்சல் அடிப்பவர்கள் தரை மட்டத்திலிருந்து 30 மீட்டருக்கு மேல் மிதப்பதுபோல் தெரியும்.

அந்தக் குளம் சுமார் 3 மீட்டர் ஆழமுடையது.

அதை நிரப்புவதற்கு 375 டன் தண்ணீர் வேண்டுமாம்.

இந்த நீச்சல்குளம் மக்களிடையே பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.

சிலர், நீச்சல்குளத்திலிருந்து, சுற்றியுள்ள காட்சிகளைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆனால் வேறு சிலரோ அதைப் பார்ப்பதற்குப் பயங்கரமாக உள்ளது என்கின்றனர்.


-CNA/Reuters/kg 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்