Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தும்மலை அடக்கினால் என்னென்ன ஆபத்து?

தும்மல் வந்தால், அதை அடக்கக்கூடாது என்று பெரியோர் பலர் கூறுவதுண்டு.

வாசிப்புநேரம் -
தும்மலை அடக்கினால் என்னென்ன ஆபத்து?

படம்: PIXABAY

தும்மல் வந்தால், அதை அடக்கக்கூடாது என்று பெரியோர் பலர் கூறுவதுண்டு.

அது உண்மைதானா? தும்மலை ஏன் அடக்கக்கூடாது?

ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய துகள்கள், சளி, பூச்சி ஆகியவை நமது மூக்குக்குள் நுழைந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுவதற்குத் தும்முவது இயற்கை.

தும்மல் வரும்போது, நமது மார்புப் பகுதியில் உள்ள தசைகள் சுருங்கும். அங்கிருந்து மூக்கு வழியாக, காற்று அதிக வேகத்துடன் வெளியேறும்.

காற்றுடன் மூக்கில் இருக்கும் துகள்களும் வெளியேற்றப்படுகின்றன.

அதனால், நாம் தும்மலை அடக்கினால், மூக்கிலிருந்து வெளியேறவேண்டிய காற்று எங்கு செல்லும்? விளக்குகின்றனர் மருத்துவர்கள்....

- காதின் நரம்புக்குள். காற்று அழுத்தத்தால் காதின் நரம்பு வெடிக்கலாம். அதனால், கேட்கும் தன்மையை இழந்துவிட வாய்ப்புண்டு.
- கண்களில் உள்ள ரத்தக் குழாயினுள்.
ரத்தக் குழாய் உடைந்து, கண்களில் உள்ள வெள்ளைப் பகுதியில் காயம் ஏற்படலாம்.
- மூளையில் உள்ள ரத்தக் குழாயினுள்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ரத்தக் குழாய் வெடிக்கலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்