Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அமெரிக்க வாழைப்பழமா? சிங்கப்பூர் டுரியனா?

அமெரிக்காவில், சில நாள்களுக்கு முன்னர் சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப்படைப்பு ஒன்று 120,000 டாலருக்கு விற்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க வாழைப்பழமா? சிங்கப்பூர் டுரியனா?

(படம்: 99 Old Trees - Durians & Desserts)

அமெரிக்காவில், சில நாள்களுக்கு முன்னர் சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப்படைப்பு ஒன்று 120,000 டாலருக்கு விற்கப்பட்டது.

அதைக் கேலி செய்து தற்போது சிங்கப்பூரிலும் ஒரு படைப்பு உருவாகியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை 99 Old Trees என்னும் உணவுக் கடையில் டுரியன் பழம் ஒன்று சுவரில் ஒட்டிவைக்கப்பட்டு Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

அதன் விலை 163,056 வெள்ளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து அந்தப் பதிவு 1000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டது.

சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட டுரியன் பழத்தின் எடை 2.15 கிலோ கிராம்.

கடையின் வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி சிலர் Comment பகுதியில் பதிவிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்