Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

டுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்

பலர் பழத்தைப்பற்றி சில தவறான நம்பிக்கைகள் காரணமாக அதைச் சாப்பிட அஞ்சுகின்றனர். அவை என்னென்ன?

வாசிப்புநேரம் -
டுரியான் பற்றிய தவறான நம்பிக்கைகள்

(படம்: AFP)

சிங்கப்பூரில் டுரியானின் நறுமணம் சந்தைகள் எங்கும் பரவி வருகிறது.

டுரியான்களில் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படுவது Musang King வகை.

முன்பு 1 கிலோகிராமுக்கு 30 வெள்ளி என்று விற்கப்பட்ட அந்த டுரியான் வகை, இப்போது 15 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

மலேசியாவில் Musang King பழங்கள் அதிகம் விளைந்ததால், அவற்றின் விலை கணிசமாகக் குறைந்தது.

டுரியானை விரும்பிச் சாப்பிடுவோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமான பழங்களை வாங்குகின்றனர்.

ஆனால் பலர் பழத்தைப்பற்றி சில தவறான நம்பிக்கைகள் காரணமாக அதைச் சாப்பிட அஞ்சுகின்றனர்.

அவை என்னென்ன?

(படம்: AFP)

1. டுரியான் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்

பொய்! டுரியான் பழத்தில் ரத்தக் கொழுப்பு இல்லை. உண்மையில் அது இதயத்துக்கு நன்மை விளைவிக்கும் கொழுப்பைக் கொண்டிருக்கிறது. கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தியும் அதற்கு உண்டு.

2. டுரியான் சாப்பிடும்போது மது அருந்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

பொய்! மரணம் இல்லை; வயிற்று வலி மட்டுமே ஏற்படும் சாத்தியம் உள்ளது.

டுரியானிலும் மதுவிலும் இருக்கும் இனிப்புச் சத்தையும் கொழுப்பையும் கல்லீரல் ஒரே நேரத்தில் செரிமானம் செய்யச் சிரமப்படும் என்பதால், வயிற்று வலி வேண்டுமானால் ஏற்படலாம். அதுவும் இரண்டையும் மிதமிஞ்சிச் சாப்பிட்டால் மட்டுமே !

3. டுரியானில் சத்து இல்லை

பொய்! டுரியான் பழத்தில் மாவுச்சத்து (carbohydrates), கொழுப்பு, புரதச்சத்து மட்டுமல்லாமல், அதில் வைட்டமின்களும், தாதுக்களும்(minerals) நார்ச்சத்தும் கணிசமாக உள்ளன.

4. டுரியான் 'உடல் சூட்டை' அதிகரிக்கும்

பாரம்பரிய மருத்துவ நம்பிக்கையின்படி, டுரியானை அதிகமாகச் சாப்பிட்டால், 'உடல் சூடு' அதிகரிக்கும். இதனால் தொண்டை வலி, சூட்டு இருமல் ஏற்படலாம்.

ஆனால் மேற்கத்திய மருத்துவத்தின்படி, டுரியான் செரிமானமாகும்போது, சிலருக்கு உடலின் வெப்பநிலை இலேசாக அதிகரிக்கலாம். ஆனால், இருமல், காய்ச்சல் ஏற்படாது.

இன்னும் என்ன தயக்கம் ?

போனால் வராது.. புறப்படுங்கள் டுரியான் கடைக்கு ! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்