Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதிகமான ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதால் நேரும் விசித்திரமான விளைவு

சீனப் புத்தாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் வீடுகளில் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் குவிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

வாசிப்புநேரம் -
அதிகமான ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதால் நேரும் விசித்திரமான விளைவு

(படம்: Pixabay)

சீனப் புத்தாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் வீடுகளில் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் குவிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்தப் பண்டிகைக் காலத்தில் வேலையிடங்களிலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து அவற்றையும் அவற்றைப் போன்றுள்ள மற்ற சிறப்புமிக்க பழ, உணவுவகைகளையும் பெற்று வீட்டுக்குக் கொண்டுவருவது வழக்கமாகிவிட்டது.

ஆனால் அதிகமான மாண்டரின் ஆரஞ்சுகளையோ இதர உணவுவகைகளையோ சாப்பிடுவதால் சிலருக்கு, சில விசித்திரமான பின் விளைவுகள் ஏற்படக்கூடும்.

அவை யாவை? விளக்கம் தருகிறார் இணை பேராசிரியர் ஜானி ஓங்.

ஆரஞ்சு போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்கிறார் அவர். அவற்றைச் சாப்பிடும்போது அவற்றின் பெரும்பகுதி உடலில் உருண்டையைப் போல் செல்கிறது. அது வயிற்றிலோ, குடல் பகுதிகளிலோ சென்று சிக்கிக்கொள்கிறது. அந்த உருண்டையின் பெயர் phytobezoar.

சீனப் புத்தாண்டுக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகமானோர் உடலில் அந்த உருண்டை சிக்கிக் கொள்வதைக் கவனித்துள்ளதாக இணை பேராசிரியர் ஓங் குறிப்பிடுகிறார்.

அரிதாக நடக்கக்கூடியதாக இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட பின்விளைவை ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 5 பேரிடம் காண்பது வழக்கம் என்கிறார் அவர்.

அதைத் தவிர்ப்பது எப்படி?

உணவை நன்கு மென்ற பின்பே விழுங்கவேண்டும்

அவ்வாறு செய்வதன் மூலம், உணவு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படும். உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு அது உதவும் என்கிறார் இணை பேராசிரியர் ஓங்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்