Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காப்பிக் குவளைகளைச் சாப்பிட முடியுமா? ஆம் இந்த விமானத்தில் முடியும்

காப்பி, தேநீர், தண்ணீர் என எதுவாக இருந்தாலும் ஏர் நியூசிலந்தில் (Air New Zealand) கொடுக்கும் குவளைகளில் குடிக்கலாம்.

வாசிப்புநேரம் -

காப்பி, தேநீர், தண்ணீர் என எதுவாக இருந்தாலும் ஏர் நியூசிலந்தில் (Air New Zealand) கொடுக்கும் குவளைகளில் குடிக்கலாம்.

குடித்த பிறகு அவற்றை சாப்பிடவும் செய்யலாம்...

ஆம் ஏர் நியூசிலந்தில் கொடுக்கப்படும் காப்பிக் குவளைகளைக் கடித்துத் தின்னலாம்.
சுவையான பிஸ்கட் குக்கீஸ்களைக் குவளைகளாக மாற்றி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது விமான நிறுவனத்தின் நோக்கம்.

அவ்வகைக் குவளைகளை சோதனை முயற்சியாக சில விமானங்களில் விநியோகித்து வருகிறது ஏர் நியூசிலந்து.

குவளைகளில் ஊற்றப்படும் பானம் வெளியே கசியாத வகையிலும், சூடு தாங்கும் வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

குவளைகள் பற்றிய யோசனை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் விரைவில் மற்ற விமானங்களிலும் அத்தகைய குவளைகளை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்