Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உண்ணக்கூடிய தண்ணீர்ப் பைகள்

ஆயிரக்கணக்கான உண்ணக்கூடிய தண்ணீர்ப் பைகள் லண்டனில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
உண்ணக்கூடிய தண்ணீர்ப் பைகள்

படம் : AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆயிரக்கணக்கான உண்ணக்கூடிய தண்ணீர்ப் பைகள் லண்டனில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்ணக்கூடிய பைகளா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தண்ணீர் இருக்கும் பைகள் லண்டனிலுள்ள Skipping Rocks Lab என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டன.

பைகள் கடற்பாசியைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன.

Ooho! காப்சியூல்கள் எனப்படும் அவற்றை மனிதர்கள் உட்கொள்ளலாம்.

பந்தயத்தில் கலந்துகொள்பவர்கள் அவற்றைச் சாப்பிட விரும்பவில்லையென்றால், பையைத் தூக்கி எறிந்துவிடலாம்.

பிளாஸ்டிக் முழுமையாக அழுக 450 ஆண்டுகள் எடுக்கும். ஆனால் இந்தப் பையோ, 6 வாரங்களில் மக்கிவிடும்.

ஓட்டப்பந்தயத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லிவிட முடியாது.

ஆனால் அவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை என்று ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்