Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மலிவு விலையில் ஆடைகளை வாங்கி ஓரிரு முறை அணிந்து வீசும் போக்கு- சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் கேடு

சுத்தமான பருத்தி கொண்டு ஒரு சட்டை செய்வதற்கு 2,700 லிட்டர் தண்ணீர் தேவை.

வாசிப்புநேரம் -

மலிவாக இருக்கின்றதே என ஆடைகளை வாங்கி, ஓரிரு முறை அணிந்துவிட்டு, அவற்றை வீசியதுண்டா?

பிரபலங்கள் அணிந்த ஆடைகளைப் போன்றே, மிக மலிவாகக் கிடைக்கின்றதே என ஆச்சரியப்பட்டதுண்டா?

அது தான் fast fashion என்று அழைக்கப்படுகிறது.

அந்த வர்த்தகச் செயல்முறையின் கீழ், ஓர் ஆடை, வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, அது விற்பனைக்கு வரத் தேவையான நேரம் மிகவும் குறைவு.

அவை அதிக அளவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலையும் மலிவு.

ஆடைகள் மலிவாகக் கிடைத்தால், அது வாடிக்கையாளர்களுக்கு நன்மை தானே என்று சிலர் எண்ணலாம்.

ஆனால், பல சமயம், அத்தகைய ஆடைகள் அதிக நாள்கள் நீடிக்கக்கூடியவை அல்ல.

அவை நீண்ட காலம் நீடித்தால், மீண்டும் புது ஆடைகளை வாங்க வேண்டிய அவசியம் எழாது.

அதனாலேயே, அவை தரமற்ற பொருள்களால் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

(படம்:Reuters/Michele Tantussi)

மேலும், மலிவாக இருப்பதால், மக்கள் அளவுக்கு அதிகமான துணிகளை வாங்கிக் குவிப்பதும், பின் அவற்றை வீசுவதும் ஒரு உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும், சுமார் 92 மில்லியன் டன் நெசவுத்துணிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.

2030க்குள், அது 134 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு.

2018ஆம் ஆண்டில், ஆடைத் துறையின் கரியமில வாயு வெளியேற்றம் 2.1 பில்லியன் டன்.

விமானத்துறையின் கரியமில வாயு வெளியேற்றத்தைவிட (900 மில்லியன் டன்) அது அதிகம்.

மேலும், அத்தகைய ஆடைகள் பெரும்பாலும் synthetic fibres என்ற பிளாஸ்டிக் கலந்த துணியால் தயாரிக்கப்படுகின்றன.

அதனால், அவற்றை மறுபயனீடு செய்வதும் சிரமம்.

சுத்தமான பருத்தித் துணிக்கு மாறிவிடலாமா?

சுத்தமான பருத்தி கொண்டு ஒரு சட்டை செய்வதற்கு 2,700 லிட்டர் தண்ணீர் தேவை.

அவற்றின் தயாரிப்புச் செலவுகள் அதிகம் என்பதால், அவற்றின் விலையும் அதிகம்.

எனினும், அவை நீண்ட நாள்களுக்கு நீடிக்கக்கூடியவை என்று கூறப்படுகிறது.

கட்டுபடியாகக் கூடிய விலையில் ஆடைகளை வாங்குங்கள்...முடிந்தவரை பயன்படுத்துங்கள்; நவநாகரிகம் என்ற பெயரில் சுற்றுப்புறத்திற்கும் நாம் ஏற்படுத்தும் கேடு அதிகம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்