Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Facebook வளர்ந்துவரும் தேவைகளை நிறைவுசெய்வதில் கவனம் செலுத்தும் - மார்க் ஸக்கர்பர்க்

சமூகக் கட்டமைப்பான Facebook மின்னிலக்க வட்டத்திலிருந்து விலகி, வளர்ந்துவரும் தேவைகளை நிறைவுசெய்வதில் கவனம் செலுத்தவிருக்கிறது.   

வாசிப்புநேரம் -
Facebook வளர்ந்துவரும் தேவைகளை நிறைவுசெய்வதில் கவனம் செலுத்தும் - மார்க் ஸக்கர்பர்க்

படம்: AFP/JUSTIN SULLIVAN

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சமூகக் கட்டமைப்பான Facebook மின்னிலக்க வட்டத்திலிருந்து விலகி, வளர்ந்துவரும் தேவைகளை நிறைவுசெய்வதில் கவனம் செலுத்தவிருக்கிறது.

பாதுகாப்பான செய்திகளை அனுப்பும் தனிப்பட்டோரின் தேவைகள் அதிகரித்திருப்பதால் அதில் சிறிய அளவில் Facebook கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆகப்பெரிய சமூகக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான விரிவான நோக்கத்தை விளக்கியபோது அதன் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) அந்தத் தகவலை வெளியிட்டார்.

தனிப்பட்டோரின் ரகசியத் தகவல்களையும் புள்ளி விவரங்களையும் பாதுகாப்பதில் நிலவும் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் மாற்றங்களை திரு. ஸக்கர்பர்கின் அறிவிப்பு பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே மில்லியன்கணக்கானோரின் தனிப்பட்ட தகவல்களை Facebook சரியான முறையில் கையாளத் தவறியதாகப் பெரும்பாலோர் சினமடைந்தனர்.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்