Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சுருங்கச் செய்வதில் நல்ல பலனை அளித்துள்ள மருந்து

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் பங்குபெறும் அனைத்துலக மருத்துவ ஆய்வுக் குழு, "Selpercatinib" எனும் மருந்து நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சுருங்கச் செய்வதில் நல்ல பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சுருங்கச் செய்வதில் நல்ல பலனை அளித்துள்ள மருந்து

(படம்: Pixabay)

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் பங்குபெறும் அனைத்துலக மருத்துவ ஆய்வுக் குழு, "Selpercatinib" எனும் மருந்து நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சுருங்கச் செய்வதில் நல்ல பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

பெரிய அளவிலான புற்றுநோய்க் கட்டிகள் காணப்படும் நோயாளிகளிடம் அது சோதிக்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோருக்குப் புற்றுநோய்க் கட்டி ஓராண்டுக்கும்-மேல் பெரிதாகவில்லை. New England மருத்துவ சஞ்சிகையில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நுரையீரல் புற்றுநோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்குப் பெரிய அளவிலான புற்றுநோய்க் கட்டிகள் காணப்படுவதுண்டு. அவர்களுக்கு வழக்கமாக அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

Selpercatinib மருந்து முதல்முறை சிகிச்சை மேற்கொள்வோர், ஏற்கனவே மற்ற மருந்துகள் பலனளிக்காதோர் என இருதரப்புக்கும் பயன்படுவதாய் ஆய்வாளர்கள் கூறினர்.

சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த, 65 புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் ஆய்வில் பங்கேற்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்