Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுவாசக்கவசங்களை எவ்வளவு நேரம் அணிய வேண்டும்?

வூஹான் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க, சளிக்காய்ச்சல் உடையவர்கள் சுவாசக்கவசங்களை அணியவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

வூஹான் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க, சளிக்காய்ச்சல் உடையவர்கள் சுவாசக்கவசங்களை அணியவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆனால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் சிலர் சுவாசக்கவசங்களை அணிகின்றனர்.

சிலர் ஒரே சுவாசக்கவசத்தைப் பல நாள் பயன்படுத்துகின்றனர்.

சுவாசக்கவசங்களின் பயன்பாடு குறித்து பல கேள்விகள் எழலாம். அவற்றின் தொடர்பில் மருத்துவர் புட்டா சுப்ரமணியம் நவ்யாவிடம் சில கேள்விகளைக் கேட்டது "செய்தி"...

சுவாசக்கவசத்தை எவ்வளவு நேரம் அணிய வேண்டும்?

சுவாசக்கவசத்தை சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து அணியலாம்.

ஆனால் சுவாசக்கவசம் மாசடைந்தால் அதை அகற்றிவிட்டு மற்றொன்றை அணிந்துகொள்ள வேண்டும்.

பயன்படுத்திய சுவாசக்கவசத்தை மீண்டும் அணியலாமா?

சுவாசக்கவசங்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடியவை. அதற்கு மேல் அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

தரமான சுவாசக்கவசங்களைப் பயன்படுத்துவது முக்கியம்.

சுவாசக்கவசங்கள் தரமானவையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

சுவாசக்கவசம் ASTM தரநிலையில் தயாரிக்கப்பட்டதா என்பதைப் பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் அதை வாங்கலாம்.

சுவாசக்கவசத்துக்குப் பதிலாகக் கைக்குட்டையைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொண்டால் போதுமா?

சுவாசக்கவசங்கள் கிருமிகளைத் தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் சாதாரணத் துணிகள் அப்படியில்லை. அதனால் கைக்குட்டையைப் பயன்படுத்துவது பயன்தராது.

பல சுவாசக்கவசங்களை ஒன்றாக அணிந்தால் மேலும் பாதுகாப்பாக இருக்குமா?

ஒருவேளை ஒரு சுவாசக்கவசத்தைப் பயன்படுத்தினால் போதும். ஒன்றன்மீது ஒன்று அணிவதால் கூடுதல் பாதுகாப்பும் ஏதும் கிடைக்காது. அதற்கான சான்றுகளும் இல்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்