Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீரிழிவு நோயாளிகள் Omega-3 துணை உணவுப்பொருள் எடுத்துக்கொள்வது அவசியமா?

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் (Type 2 Diabetes) Omega-3 மீன் எண்ணெய் கொண்ட துணை உணவுப்பொருள்களை உட்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
நீரிழிவு நோயாளிகள் Omega-3 துணை உணவுப்பொருள் எடுத்துக்கொள்வது அவசியமா?

(படம்: Pixabay/naturalpastels)

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் (Type 2 Diabetes) Omega-3 மீன் எண்ணெய் கொண்ட துணை உணவுப்பொருள்களை உட்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நீரிழிவு நோய் குணமடைய Omega-3 மீன் எண்ணெய்  துணைப்பொருள் உதவுவதில்லை என்பது நீண்ட கால ஆய்வுகளில் தெரியவந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

எண்ணெயுள்ள மீனைச் சாப்பிடுவதால் கிடைக்கும் Omega-3 உடல்நலத்திற்குச் சிறந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Omega-3 உடல்நலத்திற்கு அத்தியாவசியத் தேவை என்பதால், இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் எண்ணெயுள்ள மீன்களை வாரத்துக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Omega-3 மீன் எண்ணெய்  துணைப்பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும் என்பதால், அதற்குப் பதில் ஆரோக்கிய உணவான பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், பால் பொருள்களை உட்கொள்ளலாம். அதனால், இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்