Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்குமா?

விமானப் பயணம் சிலருக்கு உல்லாசமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம்.

வாசிப்புநேரம் -
விமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்குமா?

(படம்:Pixabay)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

விமானப் பயணம் சிலருக்கு உல்லாசமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம்.

அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ளும் போது அதிகச் சோர்வு ஏற்படுவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அது குறைக்கிறது.

இதனால் மாரடைப்பு, பக்கவாத அபாயம் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகம் பயணம் செய்யும் விமானச் சிப்பந்திகளுக்கு மறதி வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தின் போது தூக்கமும் பாதிக்கப்படுவதால் ரத்த அழுத்தம், நீரிழிவு வரும் வாய்ப்புகளும் அதிகரிப்பதாகக் கூறுகிறார் ஹாங்காங்கில் தனியார்துறை மருத்துவராக இருக்கும் டாக்டர் நிக்கோலா சால்மண்ட்.

ஆகாயத்தில் பறப்பதால் உடல் மீது படும் கதிர்வீச்சும் அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உள்ளது.

பதப்படுத்தப்பட்ட விமான உணவுகளில் அதிக உப்பு கலந்துள்ளதால், நீண்டகாலத்தில் அது உடல் நலத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இதனால் முழுமையாக விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டாம் எனக் கூறுகிறார் டாக்டர் சால்மண்ட். அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வதால்

ஏற்படும் பின்விளைவுகளைக் கண்டறிந்து, அதற்கு ஈடுகட்டும் வழியாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கலாம் என்கிறார் அவர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்